Published : 24 Jun 2021 05:52 AM
Last Updated : 24 Jun 2021 05:52 AM

கீழடி அகழ் வைப்பகம் அமைக்கும் பணி தாமதம்: ஓராண்டாகியும் அடித்தளம் கூட முழுமை அடையவில்லை

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம், திருப் புவனம் அருகே கீழடி அகழ் வைப் பகம் அமைக்கும் பணி தாமதமாக நடந்து வருகிறது. ஓராண்டாகியும் கட்டிடத்தின் அடித்தளம் கூட முழுமை அடையவில்லை.

திருப்புவனம் அருகே கீழடியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு அமைந்துள்ளது. இங்கு 2014 முதல் அகழாய்வு நடந்து வருகி றது. ஏற்கெனவே மூன்று கட்ட அகழாய்வு மத்திய தொல்லியல் துறை மூலமாகவும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வு தமிழக தொல்லியல் துறை மூல மும் நடந்தன.

தற்போது 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. 6 கட்ட அகழாய்வு மூலம் 14,535 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த அகழாய்வு மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்தது.

இதையடுத்து தொல் பொருட்களை பொதுமக்கள் காணும் வகையில் கீழடி அருகே கொந்தகையில் 2 ஏக்கரில் அகழ் வைப்பகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கப்பட்டது. இப்பணிகளை கடந்த ஆண்டு ஜூலை 20-ல் அப்போதைய முதல்வர் பழனி சாமி தொடங்கி வைத்தார். தற்போது ஓராண்டாகியும் கட்டிடத்தின் அடித்தளம் அமைக்கும் பணி கூட முடிவடையவில்லை. தாமதமாக நடந்துவரும் பணிகளால் தொல்லி யல் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:கீழடி, தமிழர்களின் பெரு மையை உலகறியச் செய்துள்ளது. இதனால் கீழடியில் அகழ் வைப்பகம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து அரசு நிதி ஒதுக்கியது. மேலும் அகழ் வைப்பகம் பணி ஓராண்டில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டாகியும் கட்டுமானப் பணிகள் இன்னும் ஆரம்ப கட்ட அளவிலேயே உள்ளன. விரைவில் கட்டிடப் பணியை முடித்து, அகழ் வைப்பகத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x