Published : 23 Jun 2021 14:32 pm

Updated : 23 Jun 2021 14:32 pm

 

Published : 23 Jun 2021 02:32 PM
Last Updated : 23 Jun 2021 02:32 PM

தெற்கு, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

chance-of-heavy-rain-in-the-southern-delta-districts-meteorological-center-information

வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் முனைவர் நா.புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


’’வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 23) தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன் 25, 26-ம் தேதிகளில் வானிலை நிலவரம்

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை நிலவரம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் (ஜூன் 24) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூன் 23 முதல் 27 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’’.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தவறவிடாதீர்!

Heavy Rainதெற்குடெல்டா மாவட்டங்கள்கனமழைக்கு வாய்ப்புவானிலை ஆய்வு மையம்வானிலை மையம்வெப்பச் சலனம்Meteorological Cente

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x