Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி ஆராய்ச்சிக்கழகம்: மத்திய அமைச்சரை சந்தித்து எம்பிக்கள் கோரிக்கை

புதுடெல்லியில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்த எம்பிக்கள் சு.வெங்கடேசன், ப.மாணிக்கம் தாகூர்.

மதுரை

மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி-ஆராய்ச்சிக்கழகம் அமைக்கக்கோரி மத்திய அமைச்சரைச் சந்தித்து மதுரை, விருதுநகர் தொகுதி எம்பிக்கள் மனு அளித்தனர்.

இது குறித்து எம்பிக்கள் சு.வெங்கடேசன், ப.மாணிக்கம்தாகூர் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: 1998-ல் பாஜக தலைமையிலான மத்திய அரசால் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் ஏற்படுத்தப்பட்டது.

2007-2008-ல் ஆமதாபாத், கவுஹாத்தி, ஹைதராபாத், ஹாஜி பூர் (பிஹார்), கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் இக்கழகம் தொடங்கப்பட்டது.

2011-ல் நடந்த 8-வது நிதி ஆணையக் கூட்டத்தில் மதுரையில் ஒரு தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. அதற்காக தமிழக அரசு மதுரையில் 116 ஏக்கர் நிலத்தை ஏற்கெனவே இலவசமாக வழங்கியது. எனவே, மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி, ஆராய்ச்சிக்கழகம் அமைத்து மாணவர் சேர்க்கையை தொடங்க மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் சேர்க்கையைத் தொடங்கினால் கட்டிடங்களை தமிழக அரசிடமிருந்து நாங்கள் பெற்றுத் தருகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x