Last Updated : 16 Jun, 2021 03:12 AM

 

Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதா?

கோப்புப்படம்

கோவை

கோவையில் தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை மாவட்ட ஆட்சியர் மறுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக, கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 2.04 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.94 லட்சம்பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். பொதுமக்களிடம் இருந்து சளி, எச்சில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று மதியம் வரை மொத்தமாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53.25சதவீதம் பேர் மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

புறநகரில் அதிகபட்சமாக சூலூரில் 8.70 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக வால்பாறையில் 0.44 சதவீதம் பேரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தினமும் சராசரியாக 3,500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்றுஉறுதி செய்யப்பட்டு வந்தநிலை யில், கடந்த 4-ம் தேதி முதல் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் கீழ்குறையத் தொடங்கியது. ஆனால்தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள் ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் கள் கூறும்போது, ‘‘அரசு மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை, தனியார் ஆய்வகங்கள் என மாவட்டத்தில் 22 மையங்கள் மூலம் தினமும் கரோனா பரிசோதனை மேற்கொள் ளப்படுகிறது.

இரு வாரங்களுக்கு முன்பு வரைதினமும் சராசரியாக 13 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வந்தது. ஆனால்,கடந்த 10 நாட்களாக பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள் ளது. கடந்த 1-ம் தேதி 11,601 பேருக்கும், 2-ம் தேதி 11,020 பேருக்கும், 4-ம் தேதி 8,303 பேருக்கும், 6-ம் தேதி 9,780 பேருக்கும், 7-ம் தேதி 9,692 பேருக்கும், 12-ம் தேதி 10,546 பேருக்கும், 14-ம் தேதி 7,618 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொற்றாளர்களை குறைத்துக்காட்ட, பரிசோதனைகளை மாவட்ட நிர்வாகம் குறைத்துள்ளதோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் கூறும்போது, ‘‘தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. சனி, ஞாயிறுகளில் தடுப்பூசி முகாம்கள் தொடர்பான பணியின் காரணமாக பரிசோதனை எண்ணிக்கை குறைந்திருக்கலாம். மற்றபடி, வழக்கமான எண்ணிக்கையில்தான் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

சுகாதாரத் துறையினர் கூறும்போது, ‘‘கடந்த மாதம் கரோனா உறுதியாகி 27 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது’’ என்றனர். இரு வாரங்களுக்கு முன்பு வரை தினமும் சராசரியாக 13 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x