Published : 14 Jun 2021 03:12 am

Updated : 14 Jun 2021 05:45 am

 

Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 05:45 AM

46 ரயில்களின் சேவை நேரம் மாற்றியமைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

train-timings

சென்னை

சென்னை எழும்பூர் - மன்னார்குடி, கொல்லம் உட்பட 46 ரயில்களின் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு ரயில்களின் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புறப்பாடு, வருகை மற்றும் இடையில் வரும் ரயில் நிலையங்களிலும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 17-ம் தேதி முதல் மன்னார்குடி - சென்னை எழும்பூர் ரயில் (06180) நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு இனி இரவு 10.53-க்கு வரும். காரைக்கால் - எர்ணாகுளம் ரயில் (06187) நாகூருக்கு மாலை 4.48 மணிக்கு வரும்.இதேபோல, புனலூர் - மதுரை (06730), சென்னை எழும்பூர் - கொல்லம் (06101), நாகர்கோவில் - கோயம்புத்தூர் (06321/06322), விழுப்புரம் - மதுரை (02867), நாகர்கோவில் - கோயம்புத்தூர் (02667), சென்னைஎழும்பூர் - புதுச்சேரி (06025/06026) உட்பட மொத்தம் 46 சிறப்பு ரயில்களில் இடைப்பட்ட சில ரயில் நிலையங்களில் புறப்பாடு அல்லதுவருகை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான ரயில்களில் சிறிய அளவில் மட்டுமே நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ரயில்களின் சேவை நேரம் மாற்றியமைப்புதெற்கு ரயில்வே அறிவிப்புTrain timingsSouthern railway

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x