Published : 21 Dec 2015 08:56 AM
Last Updated : 21 Dec 2015 08:56 AM

கோவனை கைது செய்தவர்கள்: சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- பாமக தலைவர் ஜி.கே.மணி கேள்வி

மதுவுக்கு எதிராக பாடிய கோவனை கைது செய்வதில் காட் டிய ஆர்வத்தை ஆபாச பாடல் பாடிய நடிகர் சிம்பு, இசைய மைப்பாளர் அனிருத் மீது தமிழக அரசு ஏன் காட்டவில்லை என பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி நேற்று கேள்வி எழுப் பினார்.

விழுப்புரத்தில் நேற்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியதா வது: பாமக சார்பாக சேலம், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 மண்டல மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. விழுப்புரத் தில் ஜனவரி 3-ம் தேதி 8-வது மண்டல மாநாடு நடைபெற உள் ளது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் சிறப் புரையாற்றுகின்றனர். அன்பு மணியை எல்லா தரப்பு மக்களும் அனைத்து சமுதாய மக்களும் பொதுவேட்பாளராக ஆதரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இப் போது தேர்தல் நடந்தால் கூட 80 முதல் 100 தொகுதிகளில் பாமக வெற்றி பெறும். தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத மாற்று ஆட்சி அமைவது உறுதி.

மதுவுக்கு எதிராக பாடிய கோவனை கைது செய்வதில் காட் டிய ஆர்வத்தை ஆபாச பாடல் பாடிய நடிகர் சிம்பு, இசைய மைப்பாளர் அனிருத் மீது தமிழக அரசு காட்டவில்லை. இளைஞர் களிடம் சீர்கேட்டை ஏற்படுத்தி, அவமானப்படுத்தும் வகையிலான பாடல்கள், காட்சிகளை பாமக ஒருபோதும் ஏற்காது. இது போன்ற பாடல்கள் பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்து கலாச்சார சீரழிவுக்கு அடித்தளமிடும் என்பதை பாமக வலியுறுத்துகிறது என்றார்.

‘சிம்பு, அனிருத் மன்னிப்பு கேட்க வேண்டும்’

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் தா.பாண்டியன் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண்களை மிகவும் மோசமாக இழிவுபடுத்தும் வகையில் அருவருப்பாக பாடல் பாடி வெளியிட்டுள்ள நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இரண்டு பேரும் உடனடியாக தமிழக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆபாசம் மிகுந்த அந்தப் பாடலை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x