Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM

மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்

சேத்துப்பட்டு: ஒதலவாடி ஆற்றுப்படுகையில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஒதலவாடி கிராமத்தில் உள்ள செய்யாறு ஆற்றுப் படுகையில் அதிகாலை நேரத்தில் மணல் கடத்தலில் சிலர் ஈடுபட்டுள்ளதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சேத்துப்பட்டு வட்டாட்சியர் பூங்காவனம் மற்றும் சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் வரதராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் ஆற்றுப் படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். விரைந்து சென்ற அதிகாரிகள் 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்கள் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x