Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

விவசாயத்துக்காக வழங்கப்பட்ட நகைக் கடனுக்கான வட்டியில் 3% மானியம் வழங்க உத்தரவு: வங்கிகளுக்கு நபார்டு வங்கி சுற்றறிக்கை

சென்னை

விவசாயத்துக்காக வழங்கப்பட்ட தங்க நகைக் கடனுக்கான வட்டியில், 3 சதவீதத்தை மானியமாக வழங்க அனைத்து வங்கிகளுக்கும் நபார்டு வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

விவசாயிகளுக்கு வங்கிகளில்7 சதவீத வட்டியில், விவசாயநகைக் கடன் வழங்கப்படுகிறது. கடனை முறையாக திருப்பி செலுத்துவோருக்கு 3 சதவீத வட்டி மானியமாக வழங்கப்படும்.

விவசாய நகைக் கடனுக்கானவட்டி விகிதத்தில், 5 சதவீதத்துக்கான வட்டித் தொகையை, வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கும். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

இதனால், விவசாய நகைக் கடன்களுக்கு வழங்கப்பட்டு வந்தமானியம், 2019 முதல் நிறுத்தப்பட்டது.

தற்போது, கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வருமானம் இன்றி விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், விவசாய நகைக் கடன்களை முறையாக செலுத்த முடியாமல், விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு உதவும் வகையில், கடந்தமார்ச் 1-ம் தேதி முதல், இம்மாதம்30-ம் தேதி வரையிலான தேதிகளில், நகைக் கடன்களுக்கான 7 சதவீத வட்டியில், 3 சதவீதம் மானியமாக வழங்க நபார்டு வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதனால், நகைக் கடன் முறையாக செலுத்தியவர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள், 3 சதவீத வட்டித் தொகை மானியமாக, அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x