Published : 08 Jun 2021 12:47 PM
Last Updated : 08 Jun 2021 12:47 PM

ஹாட் லீக்ஸ்: உதறிய ஸ்டாலின்... பதறிய துர்கா ஸ்டாலின்!

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் கரோனா வார்டுக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போகவேண்டும் என்று சொன்னபோது மருத்துவர்கள் சற்றே பதறிப் போனார்களாம். “நாங்கள் அணியும் சாதாரண ‘பிபிஇ கிட்’ தான் இப்போது கைவசம் உள்ளது. கூடுதல் பாதுகாப்புடன் கூடிய ‘பிபிஇ கிட்’கூட இல்லையே” என்று சொல்லி அவர்கள் எவ்வளவோ தடுத்தும் பயத்தை உதறிய ஸ்டாலின், பிடிவாதமாக சாதாரண ‘பிபிஇ கிட்’ அணிந்து கரோனா வார்டுக்குள் சென்றாராம். இந்தத் தகவல் தெரிந்ததுமே ஸ்டாலினைத் தொடர்பு கொண்ட அவரது மனைவி துர்கா, “எங்களையும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க” என்று சொல்லி கதறிவிட்டாராம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x