Published : 28 Dec 2015 08:21 AM
Last Updated : 28 Dec 2015 08:21 AM

வில்லிவாக்கத்தில் திமுக சார்பில் மருத்துவ முகாம்

வில்லிவாக்கம் சிட்கோ நகரில் திமுக சார்பில் நடந்த மருத்துவ முகாமை கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மருத்துவ முகாமை நேற்று காலை, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதில் நூற்றுக்கணக் கானோருக்கு இசிஜி, ரத்தப் பரிசோதனை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சத்து டானிக், மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமுக்கான ஏற்பாடுகளை சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x