Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கருணாநிதி பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள்: விருத்தாசலத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்

விருத்தாசலம்/விழுப்புரம்/கடலூர்

கடலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கருணாநிதி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

கடலூர் மேற்கு மாவட்ட திமுகசார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98- வது பிறந்த நாள் விழாநேற்று விருத்தாசலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விருத்தாசலம் நகராட்சி தூய்மைப் பணியாளர்களை கவுரப்படுத்தி அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார். அப்போது விருத்தாசலம் நகர திமுக செயலாளர் தண்டபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோன்று நெய்வேலியில் சபா ராஜேந்திரன் எம்எல்ஏ கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து ஏழைகளுக்கு வேட்டி, சேலை, உணவு பொருட்களை வழங்கினார். இதில் தொமுச தலைவர் திருமாவளவன், பொது செயலாளர் பாரி, பொருளாளர் ஐயப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு மற்றும் துணைத்தலைவர்கள், பகுதி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து என்எல்சி தொழிலகப் பகுதியில் தொழிலா ளர்களுக்கு தொமுச நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாள ரான எம் எல் ஏ புகழேந்தி தலைமை யில் நேற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ளஅண்ணா, கருணாநிதி, சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கோலி யனூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அத்தியூர் திருவாதி, வேலியம் பாக்கம்ஆகிய ஊராட்சிகளில் அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன், மாவட்ட அவைத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் க.மும்மூர்த்தி,துணை செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் புகழ்.செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, விழுப்புரம் நீதிமன்ற வளாகம் முன்பு திமுக வழக்கறிஞர்கள் சார்பில் வழக்கறிஞர் கல்பட்டு ராஜா தலைமையில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

குறிஞ்சிப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் சிவக்குமார் தலைமையில் வடலூரில் அவரது படம் அலங்கரித்து மாலை அணிவிக்கப்பட்டது. திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல் செஞ்சி வனத்துறை அலுவலகத்தில் அமைச்சர் மஸ்தான் மரக்கன்றுகளை நட்டார்.

தொடர்ந்து சலவை மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 1,000 குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x