Published : 27 May 2021 04:06 PM
Last Updated : 27 May 2021 04:06 PM

மருத்துவமனைகளில் பணியாற்ற குறுகியகால பயிற்சி வகுப்புகள்; வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு

பிரதிநிதித்துவப் படம்

வேலூர்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான குறுகிய கால பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன் இன்று (மே 27) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா என்ற பயிற்சி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக, சுகாதாரத்துறையில் கோவிட் - 19 தொடர்பாக, பல்வேறு பிரிவுகளில் ஒரு மாதம் கொண்ட குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அதன்படி, எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீசியன், ஜெனரல் ட்யூட்டி அசிஸ்டென்ட், கிரிட்டில் கேர் ஜெனரல் ட்யூட்டி அசிஸ்டென்ட், ஹோம் ஹெல்த் எய்ட், மெடிக்கல் எக்விப்மென்ட் அசிஸ்டென்ட், பிளேபோடோமிஸ்ட் உள்ளிட்ட படிப்புகள் கற்றுத்தரப்பட உள்ளது.

பயிற்சி முடித்த உடன் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில், தனியார் மருத்துவமனைகளில் தொழில்முறை பயிற்சியுடன் பணியில் சேரலாம். மேற்காணும் படிப்புகளுக்கு 10 மற்றும் பிளஸ் 2 முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் சேரலாம்.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, பயிற்சியில் சேர விரும்பும் பிரிவு, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை ricadvellore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 0416-2290348 அல்லது 98438 90557 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது விவரத்தை பதிவு செய்துகொள்ளலாம்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x