Published : 23 May 2021 06:27 AM
Last Updated : 23 May 2021 06:27 AM

கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தர முறைகேடு: தகுதி இல்லாதவர்களை பணி நீக்கம் செய்ய உயர்கல்வித் துறை திட்டம்

அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் கல்விச் சான்றுகளை சரிபார்த்து தகுதி இல்லாதவர்களை நீக்குவதற்கு உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் 106 கலை, அறிவியல் கல்லூரிகள், 7 பிஎட் கல்லூரிகள், 27 உறுப்பு கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை சமாளிக்க கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில் தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.20,000
தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, பணி நிரந்தரம்செய்யக் கோரி கவுரவ விரிவுரையாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.அதை ஏற்று, அரசுக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய கடந்த அதிமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, 2019 செப்.30-ம் தேதி வரை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரையறுத்த கல்வித் தகுதிகளுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் பணி வரன்முறை செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அறிவிப்புவெளியிட்டது.அதைத் தொடர்ந்து, அதற்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த பிப்ர
வரி 15 முதல் 18-ம் தேதி வரை சென்னையில் நடத்தப்பட்டது. இதில் 1,500-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் தகுதி பெற்றவர்களை பணி நிரந்தரம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இடைக்கால தடை உத்தரவு

இதை எதிர்த்து தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக விரிவுரையாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இடைக்கால தடை உத்தரவு பெற்றனர். இதனால் பணி நிரந்தர பணிகளை தமிழக அரசு நிறுத்திவைத்தது.

அதன்பிறகு நீதிமன்றத்தின் தடை உத்தரவு விலகினாலும், சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் அமலானதால் பணி வரன்முறை செயல்முறைகள் கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசு கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

முறைகேடு நடந்ததாக புகார்

இந்த சூழலில் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தர விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தமிழக அரசுக்குபுகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, ‘யுஜிசி விதித்த தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். தரகர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’ என்று உயர்கல்வி அமைச்சர் பொன்
முடி அறிவித்தார். இதனால் கவுரவவிரிவுரையாளர்கள் பணி நிரந்தரவிவகாரத்தில் இழுபறி நிலவுகிறது.இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர் சங்கத் தலைவர் வெ.தங்கராஜ் கூறியதாவது:

முதுநிலை பட்டப் படிப்புடன் நெட், செட் அல்லது பிஎச்டி முடித்தவர்களை மட்டுமே கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.50,000 வழங்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இந்த நடைமுறையை ஆட்சியாளர்கள் முறையாக பின்பற்றி இருந்தால் இந்த சிக்கல் எழுந்திருக்காது. மகப்பேறு விடுப்பு உட்படசலுகைகள் இல்லாமல் குறைந்தஅளவிலான ஊதியம் வழங்கியதால்தான் பணி நிரந்தர கோரிக்கையை நாங்கள் முன்வைத்தோம்.ரூ.5 லட்சம் வரை வசூலிப்புஅதை ஏற்று, பணிநிரந்தர அறிவிப்பை உயர்கல்வித் துறை வெளியிட்டது மகிழ்ச்சியாக இருந்தது. இதன்மூலம் சுமார் 1,200 பேர்வரை பணி வரன்முறை செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால், சில கவுரவவிரிவுரையாளர்கள் சங்கங்களின்பிரதிநிதிகளின் தவறான வழிகாட்டுதலாலும், உயர்கல்வித் துறை அதிகாரிகளின் துணையுடனும் பணி நிரந்தரம் செய்ய கவுரவ விரிவுரையாளர்களிடம் ரூ 50,000 முதல் ரூ.5 லட்சம் முன்பணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பணி நிரந்தர வழிகாட்டுதல்கள் தொடர்ந்து மாற்றப்பட்டதால் பல குளறுபடிகள் நடந்தன.

இந்த சூழலில் நீதிமன்ற தடை, தேர்தல் நடத்தை விதிகளால் அப்பணிகள் தடைபட்டன. முந்தைய அரசும் இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் எங்களது ஊதியத்தை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி, ஓராண்டு நிலுவையுடன் வழங்கியது.

ஆரம்பகாலம் முதலே கவுரவவிரிவுரையாளர்கள் நலனில் திமுகதான் அதிகம் பங்காற்றி வந்துள்ளது. எனவே, கவுரவ விரிவுரையா
ளர்கள் பணி நிரந்தர விவகாரத்தில் நடைபெற்ற குளறுபடிகளை களைந்து அரசு கல்லூரியில் பணியாற்றும் பணிமூப்பு மற்றும் உரியகல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீட்டு அடிப்படையில் பணி வரன்முறை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விதிகளுக்கு முரணாக..

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போது பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களில் 40 சதவீதம் பேர் வரை உரிய கல்வித் தகுதி பெற்றிருப்பதில்லை. அந்தந்த கல்லூரி முதல்வர்களால் விதிகளுக்கு முரணாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதையடுத்து கவுரவ விரிவுயாளர்களின் கல்விச் சான்றுகளை சரிபார்த்து தகுதி இல்லாத
வர்களை நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x