Published : 13 Dec 2015 11:19 AM
Last Updated : 13 Dec 2015 11:19 AM

ஐஎஸ் இயக்கத்தில் சேர முயன்ற சென்னை இளைஞர்: சூடான் விமான நிலையத்தில் பிடிபட்டார்

ஐஎஸ் இயக்கத்தில் சேர முயன்ற சென்னை இளைஞரை சூடான் விமான நிலையத்தில் போலீஸார் பிடித்து நாடு கடத்தினர்.

ஐஎஸ் தீவிரவாத இயக்கம் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த இயக்கத்துக்கு உறுப் பினர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சேர முயன்ற சென்னை மற்றும் கரூரைச் சேர்ந்த 2 இளைஞர்களை துருக்கி விமான நிலையத்தில் போலீஸார் பிடித்து, கடந்த மாதம் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பினர். இந்நிலையில் ஐஎஸ் இயக்கத்தில் சேர முயன்ற சென் னையைச் சேர்ந்த மற்றொரு இளை ஞரை சூடான் விமான நிலையத்தில் பிடித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி யுள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு:

சென்னையை சேர்ந்த பக்கீர் முகம் மது துபாயில் உள்ள ஒரு கார் நிறு வனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் முகம்மது நசீர்(23). மென்பொருள் பொறியாளர். கடந்த 2014 ம் ஆண்டு இவர் துபாய் சென்று தன் தந்தையுடன் சில மாதங்கள் தங்கினார். அப்போது, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள மேட் முல்லா என்பவரின் அறிமுகம் இணைய தளம் மூலம் அவருக்கு கிடைத்துள்ளது. நசீரை மூளை சலவை செய்த முல்லா, அவரை ஐஎஸ் இயக்கத்தில் சேருமாறு அழைத்துள்ளார். அவரை நம்பிய நசீரும் அதற்கு சம்மதித்துள்ளார்.

லிபியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பு டன் இணைந்து பணியாற்றுமாறு நசீரிடம் முல்லா கூறியிருக்கிறார். சூடான் நாட்டு வழியாக லிபியாவுக்குள் நுழைய சில வழிமுறைகளையும் நசீருக்கு முல்லா சொல்லிக் கொடுத் துள்ளார். இதையடுத்து சூடானுக்கு சென்ற நசீர் அங்கிருந்து லிபியா செல்வதற்காக கடந்த வாரம் சூடான் நாட்டு விமான நிலையத்துக்கு சென்றிருக்கிறார்.

சூடான் விமான நிலையத்தில் லிபியா செல்வதற்கான காரணத்தை அதிகாரிகள் கேட்டபோது, நசீர் சரியான முறையில் பதில் கூறவில்லை. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தனியே அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அவர் ஐஎஸ் இயக்கத்தில் சேர முயற்சி செய்வது தெரிந்தது. உடனே இது குறித்து இந்திய அரசுக்கு சூடான் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி அவர் வரும் தகவலையும் தெரிவித்தனர். நேற்று முன்தினம் டெல்லி வந்திறங்கிய நசீரை தேசிய விசாரணைக் குழு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நசீர் கைது செய்யப்பட்டிருப்பதை தேசிய விசாரணைக் குழு தலைவர் சரத்குமார் உறுதிப்படுத்தினார்.

“ஐஎஸ் அமைப்பில் இந்தியாவை சேர்ந்த 23 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 6 பேர் இறந்துவிட்டனர். அரசின் தொடர் கண்காணிப்பால் ஐஎஸ் அமைப்பில் சேர முயன்ற 60 இந்தியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x