Published : 18 May 2021 03:11 am

Updated : 18 May 2021 05:11 am

 

Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 05:11 AM

சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட 7 மருத்துவக் கல்லூரி டீன்கள் மாற்றம்

deans-transfer

சென்னை

சென்னை, மதுரை, சேலம், உள்ளிட்ட 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதா வது:


மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலாளர் ஆர்.சாந்திமலர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பி.வசந்தாமணி, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஜெ.சங்குமணி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும், சிவகங்கை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஏ.ரத்தினவேல், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஆர்.முருகேசன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் சிறப்பு அதிகாரியாகவும், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனை டீன் மற்றும் சிறப்பு அதிகாரி வள்ளி சத்தியமூர்த்தி, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஆர்.சுகந்தி ராஜகுமாரி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மற்றும் சிறப்பு அதிகாரியாகவும், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மற்றும் சிறப்பு அதிகாரிபி.திருவாசகமணி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


7 மருத்துவக் கல்லூரி டீன்கள் மாற்றம்டீன்கள் மாற்றம்சென்னை மதுரை சேலம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x