Published : 11 Dec 2015 09:30 AM
Last Updated : 11 Dec 2015 09:30 AM

குடும்ப வன்முறை சட்ட வழக்குகளை இதர வழக்கு என குறிப்பிடக்கூடாது: கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

குடும்ப வன்முறை சட்டத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்கு களை ஜனவரி 1 முதல் இதர வழக்கு எனக் குறிப்பிடக்கூடாது என அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பதிவாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சாவூர் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள குடும்ப வன்முறைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சாவூர் செங்க மலநாச்சியம்மன் கோயில் தெரு வைச் சேர்ந்த செண்பகவல்லி, இவர்களின் மகன்கள் அன்பு, செல்வராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு:

குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது. ஏனெ னில் குடும்ப வன்முறை சட்டம் தொடர்பான வழக்கை பொறுத்த வரை கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தால் மட்டுமே உண்மை தெரியவரும். எனவே மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. இவர்கள் மீதான வழக்கை தினமும் விசா ரித்து முடிக்க வேண்டும்.

பொதுவாக குடும்ப வன் முறை சட்டத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் சில கீழமை நீதிமன்றங்களில் குடும்ப வன்முறைச் சட்ட வழக்கு என்பதை குறிக்கும் டி.வி.எண் எனக் குறிப்பிடாமல், எம்.சி வழக்கு எனக் குறிப்பிடுகின்றனர். எம்.சி. வழக்கு எனக் குறிப்பிடும் போது அந்த வழக்கு இதர வகை வழக்கா (மிஸ்லேனியஸ் கேஸ் நம்பர்) அல்லது பராமரிப்பு வழக்காக (மெயின்டென்ஸ் கேஸ் எண்- குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படுபவை) என்ற குழப்பம் ஏற்படுகிறது.

இந்த குழப்பத்தை தவிர்க்க குடும்ப வன்முறை சட்ட வழக்கை எம்.சி. வழக்கு எனக் குறிப்பிடு வதை தவிர்க்க வேண்டும்.

எனவே, குடும்ப வன்முறைச் சட்டப்பிரிவு 26-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை ஜனவரி மாதம் முதல் குடும்ப வன்முறைச் சட்ட (டி.வி.எண்) வழக்கு எனக் குறிப்பிடுமாறு அனைத்து நீதிமன்றங்களுக்கும் பதிவாளர் 22.12.2015-க்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x