Last Updated : 29 Dec, 2015 08:14 AM

 

Published : 29 Dec 2015 08:14 AM
Last Updated : 29 Dec 2015 08:14 AM

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பாஜகவில் 2 குழுக்கள் அமைப்பு

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜகவில் 2 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்த லுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை பாஜக தொடங்கி யுள்ளது. கடந்த 16-ம் தேதி டெல்லி யில் தமிழக பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தர ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், எஸ்.மோகன் ராஜுலு, கேசவ விநாயகம் ஆகியோருடன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டப் பேரவைத் தேர்தலை எதிர் கொள்வது குறித்து விவாதிக்கப் பட்டது.

தேர்தலில் அதிமுக, திமுக வுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. எனவே, 2014 மக்க ளவைத் தேர்தலைப்போல 3-வது அணியை அமைக்குமாறு அமித்ஷா கேட்டுக் கொண்டுள் ளார். குறிப்பாக தேமுதிக, பாம கவை கூட்டணிக்குள் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் பேச்சு நடத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு ஆகியோரைக் கொண்ட குழுவும் இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புதிய நீதிக் கட்சி போன்ற கட்சிகளுடன் பேச்சு நடத்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தேசியச் செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரைக் கொண்ட மற்றொரு குழுவையும் பாஜக மேலிடம் அமைத்துள்ளது.

கடந்த 19-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்தையும், 20-ம் தேதி பாமக இளை ஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸையும் தமிழிசை சவுந்தர ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எஸ்.மோகன்ராஜுலு ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர், அனைத் திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் சதக்கத்துல்லா ஆகியோரை இல.கணேசன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.

இதுவரை நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தொடர்பாக பாஜக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே கூட்டணி என அன்புமணி ராம தாஸ் வெளிப்படையாகவே கூறி னார். விஜயகாந்த் எதற்கும் பிடி கொடுக்காமல், தொடர்ந்து பேசு வோம் என்று மட்டும் கூறினார். இதுவரை நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் எந்த முன் னேற்றமும் இல்லை’’ என்றார்.

தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டபோது, ‘‘கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இது வரை நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை குறித்து அமித்ஷா விடம் தெரிவித்துள்ளோம். அவரது வழிகாட்டுதலின்படி அடுத்த கட்டமாக பேச இருக்கிறோம். கடந்த மக்களவைத் தேர்தலைப் போலவே சட்டப்பேரவைத் தேர் தலிலும் பாஜக தலைமையில் வலிமையான 3-வது அணி அமைப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x