Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

ராமநாதபுரம் மாவட்ட புதிய அமைச்சர் யார்? - எதிர்பார்ப்பில் ராஜ கண்ணப்பன், காதர்பாட்சா முத்துராமலிங்கம்

ராஜ கண்ணப்பன்

ராமேசுவரம்

மிகவும் பின்தங்கிய மாவட் டமான ராமநாதபுரத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக் குமா என்ற எதிர்பார்ப்பில் இம் மாவட்ட மக்கள் உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் (1991-1996) அமைச் சரவையில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்சாரம் ஆகிய மூன்று முக்கியத் துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். 1996 தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் இராம.சிவராமனிடம் தோற்றுப் போனார். தொடர்ந்து திமுக ஆட்சியில் சொத்துக் குவிப்பு வழக்குத் தொடரப்பட்டது. 2000-ல் அதிமுகவை விட்டு விலகி, மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கண்ட மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதில் இளையான்குடி தொகுதி ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக் கப்பட்டும் தேர்தலில் தோற்றுப் போனார்.

இதைத் தொடர்ந்து தனது கட்சி யைக் கலைத்துவிட்டு திமுகவில் இணைந்த கண்ணப்பன் 2006 தேர்தலில் அதே இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், அப்போதைய சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதால் ராஜ கண்ணப்பனின் கனவு பலிக்காமல் போனது.

மீண்டும் அதிமுகவில் இணைந்த அவருக்கு 2009 மக்க ளவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம் பரத்தை எதிர்த்து நிறுத்தினார் ஜெயலலிதா. இந்த தேர்தலில் 3,354 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற கண்ணப்பனை 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் திருப்பத்தூர் தொகுதியில் அப் போதைய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை எதிர்த்து நிறுத்தினார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் அதிமுக ஆளும் கட்சியாக வந்தாலும் கண்ணப்பனால் கரையேற முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ராஜ கண்ணப்பனுக்கான முக்கி யத்துவம் குறைந்தது. தொடர்ந்து 2020 பிப்ரவரியில் மதுரை ஒத்தக்கடையில் பிரம்மாண்டக் கூட்டம் கூட்டி ஸ்டாலின் தலை மையில் மீண்டும் திமுகவில் இணைந்தார்.

தற்போது நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் முதுகுளத் தூரில் திமுக வேட்பாளராக களம் கண்ட ராஜ கண்ணப்பன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் அமைச்சர் பதவி கிடைக் கும் என்ற நம்பிக்கையுடன் காத்தி ருக்கிறார்.

அதுபோல ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் 50,312 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் குப்புராமை வெற்றி கொண்டார். முதன்முறையாக சட்டப்பேரவைக்குச் செல்லும் அவரும் அமைச்சர் பதவி கிடைக் கும் என்ற ஆவலில் உள்ளார்.

முன்னதாக, கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்த நிலையில், 2016-ல் ராமநாதபுரம் எம்எல்ஏ வாக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச் சராக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பதவி வழங்கினார். ஆகஸ்ட் 2019-ல் அப்போதைய முதல்வர் பழனி சாமியால் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.

தற்போது, நடந்து முடிந்த தேர்தல் முடிவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளதால் மிகவும் பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரத்திலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் இம்மாவட்ட மக்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x