Published : 03 May 2021 05:02 AM
Last Updated : 03 May 2021 05:02 AM

கோவில்பட்டியை தக்க வைத்தது அதிமுக; 12 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தினகரன் தோல்வி: தென்மாவட்டங்களில் அமமுகவுக்கு 3-வது இடமும் இல்லை

கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தோல்வியுற்றார். அதிமுக இத்தொகுதியை 3-வது முறையாக தக்கவைத்தது.

தினகரன் போட்டியிட்டதால் நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக கோவில்பட்டி பார்க்கப்பட்டது. மார்ச் 15-ம் தேதி வேட்பு
மனு தாக்கல் செய்த டி.டி.வி.தினகரன் உடனடியாக கயத்தாறு, கழுகுமலைபகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில்தமிழகம் முழுவதும் அவர் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டியது இருந்ததால், ஏப்.3,4-ம் தேதிகளில்தான் கோவில்பட்டிக்கு மீண்டும் வந்தார்.

தனது பிரச்சாரத்தில், `தான் வெற்றிபெற்றால் உங்களுக்கு 2 எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள். ஒருவர் இங்குள்ள மாணிக்கராஜா, மற்றொருவர் நான். மாணிக்கராஜா இங்கிருந்து பணிகளை பார்த்துக்கொள்வார்.நான் சென்னையில் இருந்துபணிகளை பார்த்துக் கொள்வேன்’ என்றார்.

இதனை அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். `ஒரு தொகுதியில் ஒருவர் வெற்றிபெற்றால், இருவர் எப்படி எம்எல்ஏவாக பணியாற்ற முடியும்?’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தார். மேலும், தினகரனை ஒரு சமுதாயத் துக்கு உட்பட்டவராக மாற்றி, அதிமுகவின் ஐடி அணியினர் வாட்ஸ் அப்களில் குறுஞ்செய்திகளை உலா வரச்செய்
தனர். இவை அனைத்தும் தினகரனுக்கு எதிராக திரும்பியது.

மேலும், கடம்பூர் ராஜூ, கடந்த 10 ஆண்டுகளில் தொகுதிக்கு கொண்டுவந்த 2-வது குடிநீர் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் அவருக்கு கைகொடுத்தன.

நேற்றுநடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே தினகரன் பின்தங்கி இருந்தார். 18-வது சுற்றில் சற்று முன்னேறினார். இறுதியில் 12,403 வாக்கு வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூவிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார்.

அமமுகவின் தாக்கமில்லை

அமமுக தனித்துப் போட்டியி டுவது, தென்மாவட் டங்களில் அதிமுக வெற்றியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 5 தொகுதிகள், தென்காசியில் 4 தொகுதிகள், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 3 தொகுதிகளில் அமமுக போட்டியிட்டது. இதில், கோவில்பட்டியில் தினகரன், கடையநல்லூரில் அய்யாத்துரை பாண்டியன், நாங்குநேரியில் பரமசிவ ஐயப்பன் ஆகிய மூவர் மட்டுமே குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றனர். மற்ற இடங்களில் 3-வது இடத்தை கூட அமமுகவால் பெற முடியவில்லை.

தென் மாவட்டங்களில் 3-வது இடத்தை பெரும்பாலும் நாம் தமிழர் கட்சியே பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x