Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

இன்று வாக்கு எண்ணிக்கை; கரோனா விதிமுறைகளை பின்பற்றுவதால் தமிழக தேர்தல் முடிவு தாமதமாக வாய்ப்பு; காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கும்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் நிலையில், கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதால் வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுகள் வெளியாவது நள்ளிரவைத் தாண்டி தாமதமாகும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்.6-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 76 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இதன்தொடர்ச்சியாக வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்கு கள் எண்ணப்படும். அதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குகள் அடங்கிய இயந் திரங்கள் எடுத்து வரப்பட்டு அவை எண் ணப்படும். தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை, வாக்கு எண் ணிக்கை மையத்தின் இடவசதி ஆகியவை அடிப்படையில், மேஜைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை சுற்றுக்கள் அமைக் கப்பட்டுள்ளன.

அந்த வகையில், 10 முதல் 28 மேஜை கள் வரை அமைக்கப்பட்டுள்ளன. இதில் 14 மேஜைகள் 223 தொகுதிகளுக்கு அமைக் கப்பட்டுள்ளது. அதேபோல் பல்லாவரம், செங்கல்பட்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அதிகபட்சமாக 43 சுற்றுக்கள் வரை நடத்தப்படுகிறது.

தபால் வாக்குகளை பொறுத்தவரை கடந்த ஏப்.30-ம் தேதி வரை 5 லட்சத்து 64,253 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர். கடந்தாண்டு 3 லட்சத்து 30,380 பேர் தபால் வாக்குகள் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தபால் வாக்குகளை பொறுத்தவரை 500 வாக்குகளுக்கு ஒரு மேஜை போடப்பட்டுள்ளது, சேவை வாக்குகளுக்கும் இதேபோல் மேஜைகள் அமைக்கப்படுகின்றன.

கரோனா கட்டுப்பாடுகள்

தமிழகத்தை பொறுத்தவரை தற்போது கரோனா 2-ம் அலை உச்சத்தில் உள்ளது. தினசரி 18 ஆயிரத்தை தாண்டி பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இந்தச் சூழலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறு வதையொட்டி தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக சுகாதாரத் துறையினர் இணைந்து பலமுறை ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

குறிப்பாக வாக்கு எண்ணிக்கை அலு வலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை யில் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற் கான சான்றிதழ் கட்டாயம் என்று கூறப் பட்டுள்ளது. இதற்கான பரிசோதனையும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நடத்தப்பட்டது. தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு மாற்றாக கூடுதலாக 20 சதவீதம் பேருக்கு பரி சோதனை நடத்தப்பட்டு அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர முகக்கவசம், பேஸ் ஷீல்டு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மையத்துக்குள் வரும்போது உடல் வெப்பநிலை 98.6 டிகிரியை விட அதிகரித்திருந்தால் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதுவிர, வாக்கு எண்ணிக்கை நடை பெறும் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தினமாகும். இருப்பினும், வாக்கு எண்ணிக்கையின்போது அனு மதிக்கப்பட்டவர்களுக்கு விலக்களிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், வாக்கு எண் ணிக்கை நடைபெற உள்ள 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆலோசனை நடத்தினார்.

ஏற்பாடுகள் தயார்

இதுகுறித்தும் தமிழகத்தில் செய்யப் பட்டுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான முன் னேற்பாடுகள் பற்றியும் சத்யபிரத சாஹு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தலைமை தேர்தல் ஆணையர் நடத் திய ஆலோசனைக் கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து முழுமை யாக கேட்டறிந்தார். வாக்கு எண்ணிக் கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற் போது தமிழகத்தில் வாக்கு எண்ணிக் கைக்கு நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்களில் 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதுதவிர 6 தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலு வலர்களும் கடந்த 7 நாட்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அதிகம்

தமிழகம் முழுவதும் தேர்தல் பாது காப்பு பணிக்கு 5,622 துணை ராணுவப் படையினர், 5,154 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 25,059 காவலர்கள் என மொத் தம் 35,836 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் அறைகளில் கரோனா பர வலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் அறைகளில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ள கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கையை பொறுத்த வரை ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. வாக்குகள் எண் ணப்பட்டு, ஒவ்வொரு சுற்றாக முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்அடிப்படையில், பிற்பகலில் முன்னணி நிலவரம் தெரியத் தொடங்கும். இருப்பினும், 43 சுற்றுக்கள் வரை எண்ணப்படும் நிலையில், முடிவு கள் வெளியாவது நள்ளிரவைத் தாண்டி யும் தாமதமாக வாய்ப்புள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றிக் கொண்டாட்டங்கள் கூடாது என்பது உள்ளிட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தலைமைச் செயலர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x