Published : 01 May 2021 09:40 AM
Last Updated : 01 May 2021 09:40 AM

ஹாட் லீக்ஸ்: தளபதிக்கு கார் அனுப்ப கடும் போட்டி!

கொடைக்கானல் பயணம் வந்த ஸ்டாலினுக்கு கார் கொடுக்க தென்மாவட்ட திமுகவினர் நான், நீ என்று போட்டிபோட்டார்களாம். தங்களுடைய மாவட்டத்துக்கு தளபதி வருகிறார் என்றதும், விமான நிலைய முகப்பில் தனது லேண்ட் ரோவர் காருடன் காத்திருந்தாராம் பழனி எம்எல்ஏ-வான ஐ.பி.செந்தில்குமார். ஆனால் அதையெல்லாம் தவிர்த்துவிட்டு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். அண்ணாச்சியின் இன்னோவா காரில் கோடைக்கு புறப்பட்டாராம் ஸ்டாலின். கொடைக்கானலில் ஸ்டாலின் குடும்பத்தினர் தங்குவதற்காக ஐந்து பிரபல ஓட்டல்களில் அறைகளை ப்ளாக் செய்திருந்தார்களாம். அதில் ஒன்றை செலெக்ட் செய்து கொடுத்தாராம் உதயநிதி. பிரத்யேகமாக சமைக்கப்பட்ட உணவு வகைகளே ஸ்டாலின் குடும்பத்தினருக்கு மூன்று வேளையும் அனுப்பி வைக்கும் பொறுப்பையும் ஐ.பெரியசாமி தரப்பு ஏற்றுக் கொண்டதாம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x