Published : 02 Dec 2015 10:34 AM
Last Updated : 02 Dec 2015 10:34 AM

கூர்நோக்கு இல்லத்தில் தப்பிய 5 சிறுவர்கள் மீட்பு

திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 12 பேரில் இதுவரை 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீத முள்ள 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி கீழரண் சாலையில் செயல்பட்டு வரும் அரசின் கூர் நோக்கு இல்லத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 31 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டி ருந்தனர். இவர்களில் 12 பேர் கடந்த 28-ம் தேதி தப்பிச் சென்றனர்.

தப்பியவர்களைப் பிடிக்க துணை ஆணையர் சசி மோகன் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் கடந்த 29-ம் தேதி மதுரை அவனியா புரத்தில் மறைந்திருந்த ஒரு சிறுவனை மீட்டு, திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

அதைத்தொடர்ந்து தேனி, திருச்சி தில்லை நகர் ஆகிய இடங்க ளில் பதுங்கியிருந்த 2 சிறுவர் களை மீட்டு நேற்று முன்தினம் இரவு கூர்நோக்கு இல்லத்துக்கு கொண்டு வந்தனர். அதேபோல, தேனி மாவட்டம் கூடலூரில் 2 சிறுவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று இருவரையும் மீட்டனர்.

தப்பிய 12 பேரில், இதுவரை 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 7 பேரை கண்டறியும் முயற்சி யில் போலீஸார் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x