Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM

வாக்கு எண்ணும் மைய முகவர்களுக்கு ரூ.1000 ஊதியம்: செலவு செய்ய முடியாமல் வேட்பாளர்கள் திணறல்

மதுரை

வாக்கு எண்ணிக்கை மையங் களில் நியமிக்கப்பட்டுள்ள முகவர்களுக்கு தினமும் ரூ.1000 வரை ஊதியம் வழங்க வேண்டி யுள்ளதால் வேட்பாளர்கள் பலரும் செலவு செய்ய முடியாமல் தவிக் கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் 4 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஒவ்வொரு வேட்பாளருக்கும் 2 முகவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பகல், இரவில் தலா ஒருவர் கண்காணிப்புப் பணி யை மேற்கொள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனு மதிக்கப்படுகின்றனர்.

சுயேச்சை வேட்பாளர்கள் ஓரிரு வரைத் தவிர பெரும்பாலானோர் முகவர்களை நியமிக்கவில்லை. அவர்களே விரும்பும்போது மையங்களுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர். மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் சார்பில் முகவர்கள் விரும்பும்போது வந்து செல்கின்றனர். அதிமுக, திமுக வேட்பாளர்கள் சார்பில் நியமிக்கப்படும் முகவர்கள் தவறாமல் 24 மணி நேரமும் மையங்களில் இருக்கின்றனர்.

இதற்காக ஒவ்வொரு முகவருக்கும் உணவு, பயணப்படி என்ற பெயரில் ஊதியமாக ரூ.1000 வரை வேட்பாளர்களால் வழங்கப்படுகிறது. சில வேட் பாளர்கள் மையங்களுக்கு அரு கிலேயே ஒரு கட்டிடத்தை வாட கைக்கு எடுத்து, சமையல் ஆட்களை ஏற்பாடு செய்து உணவு தயார் செய்து வழங்கி வருகின்றனர். அத்துடன் தினமும் ரூ.500 செலவுக்கு வழங்குகின்றனர். இந்த ஏற்பாடுகள் செய்யாதவர்கள் தினமும் ரூ.1000 வழங்குகின்றனர்.

முக்கிய கட்சி வேட்பாளர்கள் சிலர் தங்கள் ஆதரவுக்காக சுயேச்சை வேட்பாளர்கள் சிலரை நிறுத்தியிருந்தனர். இவர்கள் பெயரிலும் முகவர்களை முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களே நிய மித்துள்ளனர். அவர்களுக்கும் சேர்த்தே பணம் தருகின்றனர்.

இது குறித்து முகவர் ஒருவர் கூறியதாவது:

ஏப்.7-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை 26 நாட்களுக்கு முகவர்களாகப் பணியாற்று கிறோம். ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தினமும் 10 முகவர் களுக்கு தலா ரூ.1000 வீதம் செலவு செய்கிறார். இதற்காக மட்டும் 26 நாட்களில் ரூ.2.60 லட்சம் செலவாகும். குறைந்தபட்சம் தினமும் ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவாக செலவு செய்ய முடி யாத நிலையில் கட்சி வேட்பாளர் கள் பலர் உள்ளனர்.

முகவர்களுக்குப் பணம் தர முடியாமல் வேட்பாளர்கள் சிலர் தவிக்கும் நிலையும் உள்ளது. கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் 2 கட்சிகளின் முகவர்களும் தொய்வின்றி பணியாற்றுகின்றனர். சில தொகுதிகளில் அதிமுக முகவர்களே பெயரளவுக்கு மட்டுமே வந்து செல்கின்றனர். கட்சி விசுவாசத்துக்காகப் பணம் வாங்காமல் பணியாற்றும் சூழல் தற்போது இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x