Published : 18 Apr 2021 03:18 am

Updated : 18 Apr 2021 10:06 am

 

Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 10:06 AM

சித்திரைத் திருவிழா ரத்தானதால் மதுரையில் தினமும் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு: கரோனாவால் மீள முடியாமல் தவிக்கும் திருவிழா நகரம்

chithirai-thiruvizha

மதுரை

மதுரையில் சித்திரைத் திருவிழா ரத்தானதால் திருவிழா நாட்களில் தினசரி நடக்கும் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவிழா என்றாலே கொண்டாட்டமும், உற்சாகமும் கரைபுரண்டு ஓடும். அதுவும் தமி ழர்களின் வரலாறும், கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் தலைநகரமான மதுரையில் ஆண்டு முழுவதுமே திருவிழாக்கள் களை கட்டும். அந்தளவுக்கு திருவிழாக்கள், மதுரை மக்களின் வாழ்வியலோடு பின்னி பிணைந் திருக்கின்றன. அதனாலேயே மதுரைக்கு திரு விழாக்களின் நகரம் என்ற அடையாளமும் உண்டு.


ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடந் தாலும் அதில் மிகுந்த விசேஷமான திருவி ழாவாக சித்திரைத் திருவிழா பார்க்கப்படுகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேம், தேரோட்டம், அதன் தொடர்ச்சியாக நடக்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை தென் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். இந்த திருவிழாவில் பங்கேற்க பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த சித்திரைத் திருவிழா நாளில் அனைத்து வகை வியாபாரமும் ஜோராக நடக்கும்.

சென்னை, கோவையைப் போன்று மதுரை யில் பெரிய தொழிற்பேட்டைகள் இல்லாததால் திருவிழாக்களை அடிப்படையாகக் கொண்டே மதுரையின் ஒட்டுமொத்த வர்த்தகமும் அமைந்துள்ளது. ஆனால் தற்போது கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஓராண்டுக்கு மேலாகவே மதுரையில் திருவிழாக்கள் நடக்கவில்லை.

கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ரத்தானதால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், சிறுதொழில்கள், சிறு, குறு வியாபாரிகள் நலிவடைந்தனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை யிழந்தனர்.

திருவிழா ரத்து

இந்நிலையில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் ஓரளவு கரோனா கட்டுக்குள் வந்ததால் இந்த ஆண்டு திருவிழா வழக்கம்போல் உற்சாகமாக நடக்கும் என்றும், அதன் மூலம் வியாபாரமும், தொழில்களும் எழுச்சிபெறும் என்றும் அனை த்து வியாபாரிகளும் நம்பிக்கையுடன் இருந் தனர். ஆனால் இந்த ஆண்டும் சித்திரைத் திருவிழாவை ரத்து செய்து, அனைத்து வகை நிகழ்வுகளும் கோயில் வளாகத்துக்குள் நடக்கும் என்றும், பக்தர்கள் பங்கேற்க தடையும் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார்.

அதனால் இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தினமும் இந்த சித்திரை திருவிழாவால் வாழ்வாதாரம் பெற்று வந்த சிறு, குறு வியாபாரிகள், நாட்டுப்புற கலைஞர்கள், கிராமியக் கலைஞர்கள் உள்ளிட்ட அனை த்து தரப்பினரும் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்துக்குச் சென்று முறையிட்டும், போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். திருவிழா நடந்தால் மக்கள் புத்தாடைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், பூஜை பொருட்கள், நேர்த்திக்கடன் பொருட்கள், பூக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்குவார்கள்.

திருவிழா நாட்களில் மதுரையில் குவியும் மக்களால் தள்ளுவண்டி கடைகள், ஹோட்டல்கள், பலகார கடைகள் போன்ற உணவுப்பொருள் வியாபாரமும் களைகட்டும். தற்போது சித்திரைத் திருவிழா ரத்தானதால் திருவிழா களைகட்ட வேண்டிய இந்த நேரத்தில் பொது ஊரடங்கு அறிவித்ததுபோல் மதுரை வெறிச்சோடி காணப்படுகிறது.

வர்த்தகம் பாதிப்பு

இதுகுறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க மதுரை மாவட்டத் தலைவர் ஜெயபிரகாசம் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு பாதிப்பில் இருந்து மீண்டு 50 சதவீதம் வியாபாரிகள் தற்போதுதான் பழைய நிலைக்கு வந்துள்ளனர். 25 சதவீதம் வியாபாரிகள் இன்னும் மீள முடியாமல் தவிக்கின்றனர். மீதி 25 சதவீதம் வியாபாரிகள் காணாமல் போய்விட்டனர். முன்புபோல் பொது ஊரடங்கு அறிவித்தால் மீதமுள்ள வியாபாரிகளும் காணாமல் போகலாம்.

சித்திரைத் திருவிழா நடந்தால் திருவிழா நாட்களில் சாதாரண தள்ளுவண்டி வியா பாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை மதுரையில் தினமும் ரூ.200 கோடி வரை வர்த்தகம் நடக்கும். திருவிழா நாட்களில் சாதாரண ஜிகர்தண்டா வியாபாரத்தில் கூட லட்சக்கணக்கில் வணிகம் நடக்கும்.

தற்போது அதுபோன்ற வர்த்தக வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால் மக்கள் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அரசு அறிவித்த இந்த கட்டுப்பாடுகளை வரவேற்கிறோம். ஆனால் இந்த கட்டுப்பாடுகளை தேர்தல் வரை காத்திருந்து தற்போது அறிவித்தது வருத்தம் அளிக்கிறது.

தேர்தல் காலத்தில் கட்டுப்பாடில்லாமல் கூடிய கூட்டமே தற்போதைய கரோனா பரவலுக்கு காரணம். அமெரிக்காவில் நடக்கும் தேர்தல்களில் நமது நாட்டைப்போல் கூட்டமாக சென்று யாரும் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே சென்று ஆதரவு திரட்டுவார்கள். அதுபோன்ற பிரச்சார திட்டத்தை இந்த கரோனா காலத்தை வைத்தாவது தேர்தல் ஆணையம் நடை முறைப்படுத்தியிருக்கலாம்,’’ என்றார்.சித்திரைத் திருவிழாமதுரைரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்புதிருவிழா நகரம்Chithirai thiruvizha

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x