Published : 12 Apr 2021 03:20 AM
Last Updated : 12 Apr 2021 03:20 AM

கரோனா பரவலால் மீண்டும் மூடப்படும் காந்தி மார்க்கெட்: இன்று முதல் ஜி கார்னரில் மொத்த, சில்லறை விற்பனை

கரோனா பரவல் தடுப்பு நட வடிக்கையாக திருச்சி காந்தி மார்க்கெட் மீண்டும் மூடப்பட்டு, இன்றிரவு (ஏப்.12) முதல் மொத்த, சில்லறை விற்பனை பொன்மலை ஜி.கார்னர் மைதானத்துக்கு மாற்றப்படுகிறது.

திருச்சியில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக காந்தி மார்க்கெட்டில் செயல்படும் சில்லறை விற்பனை கடைகளை ஏப்.11 (நேற்று) முதல் பொன்மலை ஜி கார்னர் மைதானத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், காந்தி மார்க்கெட் வியா பாரிகளில் ஒருதரப்பினர் இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள வில்லை. வழக்கம்போல, காந்தி மார்க்கெட்டிலேயே நேற்று சில் லறை விற்பனை கடைகளை அமைத்து விற்பனையில் ஈடு பட்டனர்.

இதையடுத்து, பொதுமக்கள் காந்தி மார்க்கெட்டுக்குள் செல்ல முடியாதபடி பிரதான நுழைவுவாயில்களை மாநகராட்சி அதிகாரி களும், காவல்துறையினரும் பூட்டி னர். மொத்த வியாபாரிகளின் கடைகளுக்குச் செல்லக்கூடிய நுழைவுவாயில்களை மட்டும் திறந்து வைத்திருந்தனர். இதற்கு வியா பாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, சில்லறை விற்பனையுடன் சேர்த்து மொத்த விற்பனையையும், பொன் மலை ஜி கார்னர் மைதானத்துக்கு மாற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து காந்தி மார்க்கெட்டி லுள்ள மொத்த, சில்லறை வியா பாரிகளுடன் காவல் துணை ஆணையர்கள் பவன்குமார் ரெட்டி (சட்டம், ஒழுங்கு), வேதரத்தினம் (குற்றம், போக்குவரத்து), வட்டாட்சியர் குகன் மற்றும் மாநக ராட்சி அதிகாரிகள் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஏப்.12-ம் தேதி (இன்று) இரவு முதல் அனைத்து கடை களையும் பொன்மலை ஜி கார் னர் மைதானத்துக்கு மாற்றிக் கொள்ள வியாபாரிகள் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் மொத்த, சில்லறை கடைகள் அமைப்பதற்கான கட்டமைப்பு மற்றும் அடிப் படை வசதிகளை ஏற்படுத்தும் பணி களில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நுகர்வோர் அமைப்புகள் எதிர்ப்பு

இதுகுறித்து நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.சேகரன் கூறும் போது, ‘‘பொன்மலை ஜி கார் னர் மைதானத்தில் மொத்த, சில்லறை விற்பனை என அனைத்து கடைகளையும் ஒரே இடத்தில் அமைக்க முடிவு செய்திருப்பது தவறான முடிவு. மீண்டும் ஒரேஇடத்தில் மக்களைக் குவிக்கக்கூடாது. அப்படி செய்தால், அங்கே கரோனா பரவலைத் தடுக்க முடியாது. அதற்கு பதிலாக மக்கள் கூட்டத்தை ஆங்காங்கே பிரித்து அனுப்ப வேண்டும்.

எனவே, கரோனா முதல் அலை வந்தபோது கடை பிரிக்கப்பட்டதைப் போல மொத்த விற்பனையை பொன்மலை ஜி கார்னர் மைதானத்திலும், சில்லறை விற்பனையை மாந கரின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்க வேண்டும். இதுகுறித்து ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். நடவடிக்கை இல்லாதபட்சத்தில் அடுத்தகட்ட மாக நுகர்வோர் சங்கங்கள் அனைத்தும் ஒன்றுகூடி உரிய முடிவு எடுப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x