Published : 25 Nov 2015 09:08 AM
Last Updated : 25 Nov 2015 09:08 AM

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 8 பேராசிரியர்களுக்கு டீனாக பதவி உயர்வு: 2 டீன்கள் இடமாற்றம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 8 பேராசிரியர்களுக்கு டீனாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2 டீன்களை இடமாற்றம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி புதிதாக தொடங்கப்பட உள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு அலுவலர் மற்றும் டீனாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை டீன் குணசேகரன், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பதவி உயர்வு

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு மருத்துவத்துறை பேராசிரியர் வசந்தாமணி விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறுநீரக அறுவைச் சிகிச்சைத் துறை பேராசிரியர் பிச்சை பாலசண்முகம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை - சென்னை மருத்துவக் கல்லூரி இதய அறுவைச் சிகிச்சைத் துறை பேராசிரியர் கணேசன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொது மருத்துவத்துறை பேராசிரியர் கனகராஜ் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மயக்கவியல் துறை பேராசிரியர் திருநாவுக்கரசு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொது மருத்துவத்துறை பேராசிரியர் வைரமுத்து மதுரை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

சீர்காழி சிவசிதம்பரம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை - சென்னை மருத்துவக் கல்லூரி மருந்தியல் துறை பேராசிரியர் சீர்காழி சிவ சிதம்பரம் பெரம்பலூரில் புதிதாக தொடங்கப்பட்ட உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு அலுவலர் மற்றும் டீனாகவும், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு மருத்துவத்துறை பேராசிரியர் பரிமளா தேவி புதுக்கோட்டையில் புதிதாக தொடங்கப்பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு அலு வலர் மற்றும் டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x