Published : 10 Mar 2014 12:00 AM
Last Updated : 10 Mar 2014 12:00 AM

கடலூரைக் கேட்கும் தேமுதிக; தர மறுக்கும் பாமக

பாஜக கூட்டணியில் இடம்பெற் றுள்ள பாமக ஏற்கெனவே 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் களை அறிவித்தது. பாமக தலைமை நிர்வாகி ஒருவர் கூறுகையில் புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி நடத்தும் விஜயகாந்தின் உறவினருக்காகத்தான், கடலூர் தொகுதியை தேமுதிக வலுக் கட்டாயமாக கேட்கிறது என்றார்.

கடலூர் பாமக வேட்பாளராக ஆர்.கோவிந்தசாமி ராமதாஸின் வற்புறுத்தலை மறுக்க முடியாமல் அரை மனதுடன் களமிறங்கினார். தற்போது கூட்டணி பலமானதைத் தொடர்ந்து,தொகுதியை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் தவிக்கி றார். ஆனால் பாமக தலைமையோ தேமுதிக.வுக்கு விட்டுக்கொடுக்க பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோவிந்தசாமி யிடம் கேட்டபோது, கட்சி மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ அதன்படி எனது முடிவு அமையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x