Published : 04 Nov 2015 08:29 AM
Last Updated : 04 Nov 2015 08:29 AM

சிவகங்கை இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கு: 2 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை இளம்பெண்ணை ஐபிஎஸ் அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப் படும் விவகாரத்தில், 2 மாதங் களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த டி.வின்சென்ட் உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனுவில், ‘சிவகங்கை அருகே வைரவன் பட்டியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடந்த 10 ஆண்டு களாக பலரும் பாலியல் பலாத் காரம் செய்துள்ளனர். அதனால் பலதடவை கருவுற்று, பின்னர் அதனைக் கலைத்துள்ளார். இதையடுத்து அப்பெண் மனரீதி யாகவும், உடல்ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும், இளம்பெண்ணை சீரழித்த குற்றத்துக்காக சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் கோரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் வின்சென்ட் கூடுதல் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ‘பாதிக்கப்பட்ட இளம் பெண் தனது வாக்குமூலத்தில், உயர் காவல் அதிகாரிகள் பற்றி தெரிவித்ததுடன், அவர்களை அடையாளமும் காட்டியுள்ளார். ஆனால், அந்த ஆதாரங்கள் காவல் அதிகாரிகளின் வற்புறுத்தலால், அழிக்கப்பட்டுவிட்டன. இதன் மூலம் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை காப்பாற்றியுள்ளனர். இவ்வழக் கில் முறையான விசாரணை நடைபெறுவதற்கு இதனை சிபிஐ-யிடம் ஒப்படைக்க உத்தர விட வேண்டும்’ என்று கூறப் பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகி யோர் கொண்ட முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு: இவ்வழக்கில் சிபிசிஐடி விசார ணைக்கு பெண் போலீஸ் அதிகாரி ராதிகா உதவி செய்ததாக வும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுவிட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டது. இங்கு தாக்கல் செய்யப்பட்ட விசாரணையின் இடைக்கால அறிக்கையை பரிசீலித்தோம்.

இவ்வழக்கில் இறுதி அறிக்கையை 2 மாதங்களில் தாக்கல் செய்வதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள் ளார். விசாரணை ஜன 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்ட னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x