Published : 31 Mar 2021 03:17 AM
Last Updated : 31 Mar 2021 03:17 AM

மின் வாரியம் கடனில் மூழ்க ஊழலே காரணம்: கோவில்பட்டி பிரச்சாரத்தில் வைகோ குற்றச்சாட்டு

தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இதற்கு ஊழல் தான் காரணம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் மதசார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் கே.சீனிவாசனை ஆதரித்து லட்சுமி மில் மேம்பாலம் அருகே, நாலாட்டின்புதூர், இடை செவல், வில்லிசேரி ஆகிய கிராமங்களில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

இங்கு போட்டியிடும் அமைச்சர்10 ஆண்டுகளில் என்ன செய்துள்ளார்? இப்போது ஆங்காங்கே விஷமத்தனமாக, வேற்றுமை உணர்வுகளை உருவாக்கும் நோக்கத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். கோவில்பட்டிக்கு திமுக தான் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்தது. அமைச்சர் எந்தப் பணியும் செய்தது இல்லை. சீனிவாசன் பொதுமக்களுக்காக பாடுபடுகிறார்.

டெல்லியில் 120 நாட்களுக்கு மேல் போராடும் விவசாயிகளை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை. அதானி, அம்பானிகளுக்காகத் தான் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளார். விவசாயிகளுக்கு விரோதமான இந்த சட்டங்களால் மண்டிகள், உணவுக் கழகம், மார்க்கெட்டிங் கமிட்டி ஆகியவை இருக்காது.

நன்றாக விளையும் காலத்தில் விளைபொருட்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்து விலைக்கு வாங்கிஅதனை பெரிய சேமிப்புக் கிடங்கில்வைத்துக் கொள்வார்கள். இதற்காக8.75 லட்சம் டன் கொள்ளளவுகொண்ட சேமிப்பு கிடங்கை அதானி ஏற்கெனவே கட்டிவிட்டார்.

இப்போது மோடி அரசு மின்சார திருத்தச்சட்டம் கொண்டு வருகிறது. இந்த ஆட்சி தொடருமானால் இலவச மின்சாரம் இருக்காது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இதற்கு ,ழல் தான் காரணம். கடந்த 5 ஆண்டுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒரு கோடியே 41 லட்சத்து 716ரூபாய், ஆனால் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளின் தரம் உயரவில்லை. இங்கு கதாநாயகனாக நிற்பது சீனிவாசன். மக்கள் தொண்டனுக்கு தான் போட்டியில் இடம் இருக்கிறது. மற்றவர்களுக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள், என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x