Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

தமிழக காவல் துறையில் இருந்து முதல்முறையாக தேசிய ஆணழகன் போட்டிக்கு தேர்வான தலைமைக் காவலர்

புருஷோத்தமன்

சென்னை

சென்னை அடையாறு போக்குவரத்து காவல் துறையில் தலைமைகாவலராக பணிபுரிபவர் புருஷோத்தமன். இவர் கடந்த 2002-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். அதற்கு முன்பே, தனது 18 வயது முதல் பல்வேறு ஆணழகன் போட்டிகளில் பங்குபெற்று ‘மிஸ்டர் சென்னை’, ‘மிஸ்டர் தமிழ்நாடு’ என பல பட்டங்களை பெற்றுள்ளார்.

ஏற்கெனவே 2000, 2001-ம் ஆண்டுகளில் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டம் வென்ற இவர், 2002-ல் காவல் பணியில் இணைந்த பிறகும்,போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றார். 2004 முதல் 2008 வரை தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் என மொத்தம் 7 ஆண்டுகள் ‘தமிழ்நாடு ஆணழகன்’ போட்டியில் கலந்துகொண்டு 7 முறை ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டம் பெற்றார்.

கடந்த 2008-ல் எதிர்பாராதவித மாக ஒரு விபத்தில் சிக்கியதால், புருஷோத்தமனுக்கு எந்தவித கடுமையான உடற்பயிற்சியும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.அதில் இருந்து மீண்டு வந்து, தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார்.

சென்னையில் 2018-ல் நடந்த ‘மிஸ்டர் ஆணழகன் தமிழ்நாடு’ போட்டியில் கலந்துகொண்டு, 80 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.மேலும், அனைத்து எடைப் பிரிவுகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்று ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டத்தை மீண்டும் வென்றார்.

இந்நிலையில், 49-வது சீனியர் மிஸ்டர் தமிழ்நாடு போட்டி கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. அதில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக 80 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற புருஷோத்தமன், வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து, டெல்லியில் வரும் ஏப்ரல்4-ம் தேதி நடக்க உள்ள ஃபெட ரேஷன் கோப்பை மற்றும் ஏப்ரல் 23, 24-ம் தேதிகளில் நடைபெறும் இந்திய அளவிலான ஆணழகன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x