Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குள் வேலை தராவிட்டால் நடுரோட்டில் நிற்க வைத்து அடியுங்கள்: முன்னாள் எம்பி கண்ணன் ஆவேசம்

பாஜக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குள் புதுச்சேரியில் இளைஞர்க ளுக்கு வேலை தராவிட்டால் நடுரோட்டில் நிற்க வைத்து அடியுங்கள் என்று முன்னாள் எம்பி கண்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் அண்மையில் இணைந்த முன்னாள் எம்பி கண் ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் அலுவலகத்தில் அதிகார உச்சத்தில் சிங்கம் போல் இருந்த நாராயணசாமி புதுச்சேரி வளர்ச்சிக்கு ஏன் எதுவும் செய்யவில்லை? மத்தியில் பல ஆண்டு களாக ஆட்சியில் இருந்த காங்கிர ஸூம் புதுச்சேரிக்கு எதுவும் செய்ய வில்லை. ரங்கசாமி முதல்வராக இருந்தபோது வீரேந்திர கட்டாரியா என்ற ஆளுநரை வைத்துக்கொண்டு ரங்கசாமிக்கு நாராயணசாமி தரப்பில் தொல்லை கொடுத்தனர்.

புதுச்சேரியில் 2.5 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கப் போகின்ற திட்டத்தை பாஜக அறிவித்துள்ளது. ஓராண்டு காலக் கெடுவில் ஏராளமானோருக்கு வேலை

கொடுப்போம். இல்லாவிட்டால் என்னை நடுரோட்டில் நிற்க வைத்துஅடியுங்கள்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப் போவதாக அறிவித்தனர். யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. பித்தலாட்டமான ஏமாற்றும் விதத்தில் வாக்குறுதியை அளித்தனர்.

புதுச்சேரிக்கு பாஜக வந்த துமே காங்கிரஸூக்கு பயம் வந்துபாஜகவை ரவுடி கட்சி என பச்சை பொய்யை சொல்கின்றனர். கார்ப்பரேட் என்பது ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை. காங்கிரஸ் கட்சியில் கார்ப்பரேட் இல்லையாஎன்பதை தெளிவுப்படுத்த வேண் டும். காங்கிரஸூக்கு வாக்களிப்பது நமது தலையில் நாமே நெருப்பைபோட்டுக்கொள்வது போன்றது தான்” என்று குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் கூறுகையில், “மீனவர்களை மத்திய அரசு உடனடி யாக இலங்கையிலிருந்து மீட் டுள்ளது. பாஜக கலவரத்தை தூண்டுவதாக நாராயணசாமி திசைதிருப்புகிறார். அதுதான் காங்கி ரஸின் செயல்பாடு.

அனைத்து மக்களும் முன் னேற வேண்டும் என்பதே எங்கள்இலக்கு. புதுச்சேரியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட் டுள்ளது. அவர்கள் கடந்த 2016-ம்ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாமல் விட்ட நிலையில், மீண்டும் அதே தேர்தல் ஆறிக்கையை வெளியிட்டு புதுவை மக்களை ஏமாற்ற முயற்சித்துள்ளனர். கடந்த 5 ஆண்டு காங்கிரஸ் அரசில் ஏதுவுமே செய்யவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு பதில் அளிக்காமல், அதே தேர்தல் அறிக்கையை மீண்டும் வெளியிட்டுள்ளனர்’’ என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x