Published : 25 Mar 2021 06:58 PM
Last Updated : 25 Mar 2021 06:58 PM

தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்; சென்னையில் மாற்றப்பட்ட உதவி ஆணையர்கள்: முழு விவரம் 

சென்னை

தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பிக்கள், உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதில் சென்னையில் சட்டம்-ஒழுங்கு பணியில் இருந்த சில உதவி ஆணையர்கள் தவிர அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்ததை அடுத்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள், காவல்துறையினரை இடமாற்றம் செய்யத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இது தவிர அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எழுந்த புகாரிலும் அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர்.

இவ்வாறு மாற்றப்படுபவர்கள் நேரடித் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த ஒரு வாரமாக தென் மண்டல ஐஜி, கோவை ஆணையர், ஆட்சியர், ஏடிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் மாற்றப்பட்டனர். இதேபோல் இன்று தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் 55 டிஎஸ்பிக்கள், உதவி ஆணையர்களை காவல்துறை தலைவர் திரிபாதி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி மாற்றப்பட்ட சில உதவி ஆணையர்கள் விவரம்:

திருவொற்றியூர் உதவி ஆணையர் ஆனந்தகுமார் மாற்றப்பட்டு, திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக உதவி ஆணையர் பொன்சங்கர், திருவொற்றியூர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேப்பேரி உதவி ஆணையர் கமலக்கண்ணன் மாற்றப்பட்டு, சேலம் தெற்கு நகர் குற்றப்பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் ரயில்வே டிஎஸ்பி பாபு மாற்றப்பட்டு, வேப்பேரி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புளியந்தோப்பு உதவி ஆணையர் பிரகாஷ்குமார் மாற்றப்பட்டு, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறைத்துறை நுண்ணறிவு மற்றும் ஊழல் கண்காணிப்பு டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி மாற்றப்பட்டு, புளியந்தோப்பு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர் நீதிமன்றம் உதவி ஆணையர் விஜயராமுலு மாற்றப்பட்டு, கள்ளக்குறிச்சி குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சிபிசிஐடி காவல் ஆய்வு பிரிவு டிஎஸ்பி சரஸ்வதி மாற்றப்பட்டு, உயர் நீதிமன்ற உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வில்லிவாக்கம் உதவி ஆணையர் அகஸ்டின் பால் சுதாகர் மாற்றப்பட்டு, சென்னை போலீஸ் அகாடமி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை போலீஸ் அகாடமி டிஎஸ்பி ஸ்டீபன் மாற்றப்பட்டு, வில்லிவாக்கம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்கேபி நகர் உதவி ஆணையர் ஹரிகுமார் மாற்றப்பட்டு, விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமுக நலன் மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பி கலைச்செல்வன் மாற்றப்பட்டு, எம்கேபி நகர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணா நகர் உதவி ஆணையர் பாலமுருகன் மாற்றப்பட்டு, விழுப்புரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ராஜன் மாற்றப்பட்டு, அண்ணாநகர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீலாங்கரை உதவி ஆணையர் விஸ்வேஸ்வரய்யா மாற்றப்பட்டு, சேலையூர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலையூர் உதவி ஆணையர் சகாதேவன் மாற்றப்பட்டு, நீலாங்கரை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி-2 மெட்ரோ சென்னை டிஎஸ்பி அண்ணாதுரை மாற்றப்பட்டு, நுங்கம்பாக்கம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி மாற்றப்பட்டு, வேலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

செம்பியம் உதவி ஆணையர் சுரேந்திரன் மாற்றப்பட்டு, திருச்சி குற்ற ஆவணக் காப்பக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி வீரமணி மாற்றப்பட்டு, செம்பியம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ராஜா மாற்றப்பட்டு, கள்ளக்குறிச்சி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ராஜாமோகன் மாற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போரூர் எஸ்.ஆர்.எம்.சி உதவி ஆணையர் அசோகன் மாற்றப்பட்டு, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி பழனி மாற்றப்பட்டு, போரூர் எஸ்.ஆர்.எம்.சி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எண்ணூர் உதவி ஆணையர் ராஜேந்திரன் மாற்றப்பட்டு, கடலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கந்தகுமார் மாற்றப்பட்டு, எண்ணூர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர் மாற்றப்பட்டு, திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பரங்கிமலை உதவி ஆணையர் சம்பத் மாற்றப்பட்டு, வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோட்டூர்புரம் உதவி ஆணையர் செம்பேடு பாபு மாற்றப்பட்டு, பரங்கிமலை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவலர் பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல் உதவி ஆணையர் ஜீவாநந்தன் மாற்றப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அசோக் நகர் உதவி ஆணையர் ஃபிராங் டி ரூபன் மாற்றப்பட்டு, செங்கை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு டிஎஸ்பி தனபாலன் மாற்றப்பட்டு, அசோக் நகர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடபழனி உதவி ஆணையர் ராஜசேகர் மாற்றப்பட்டு, சென்னை தகவல் தொழில் நுட்பப்பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தகவல் தொழில் நுட்பப்பிரிவு டிஎஸ்பி ஆரோக்கிய ரவீந்திரன் மாற்றப்பட்டு, வடபழனி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அயனாவரம் உதவி ஆணையர் சீனிவாசன் மாற்றப்பட்டு, திருச்சி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சந்திரன் மாற்றப்பட்டு, அயனாவரம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராயபுரம் உதவி ஆணையர் தினகரன் மாற்றப்பட்டு, பாலக்கோடு சப் டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலக்கோடு சப் டிவிஷன் டிஎஸ்பி சீனிவாசன் மாற்றப்பட்டு, ராயபுரம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களோடு சேர்த்து 55 டிஎஸ்பிக்கள், உதவி ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x