Published : 16 Nov 2015 05:02 PM
Last Updated : 16 Nov 2015 05:02 PM

சென்னையில் இருந்து புறப்படும் முக்கிய ரயில்களின் பாதையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர் மற்றும் ஆந்திர கடலோரப் மாவட்டங்களில் கனமழை பெய்வதன் காரணமாக சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் சில ரயில்களின் மார்க்கம் மாற்றப்பட்டுள்ளது.

அதாவது அரக்கோணம், ரேணிகுண்டா, குடூர் மார்க்கமாக மாற்றப்பட்ட ரயில்கள் விவரம் வருமாறு:

வண்டி எண் 12269 சென்னை-நிஜமுதீன் விரைவு ரயில்

வண்டி எண் 12842 சென்னை-ஹவுரா கொரமாண்டல் விரைவு ரயில்

வண்டி எண் 12656 சென்னை-நவஜீவன் விரைவு ரயில்

வண்டி எண் 12687 மதுரை-டெஹ்ராடூன் விரைவு ரயில்

வண்டி எண் 06336 கொச்சுவெலி-குவஹாத்தி விரைவு ரயில்

வண்டி எண் 22352 எஸ்வந்த்பூர்-பாடலிபுத்திரா வாராந்திர விரைவு ரயில்

வண்டி எண் 22860 சென்னை - பூரி வாராந்திர விரைவு ரயில்

வண்டி எண் 17643 சென்னை எழும்பூர்-காகிநாடா போர்ட் சர்கார் விரைவு ரயில்

வண்டி எண் 12669 சென்னை-சப்ரா கங்கா காவேறி விரைவு ரயில். இது இன்று மாலை 17.40 மணிக்குப் புறப்படுகிறது.

வண்டி எண் 12759 சென்னை செண்ட்ரல்-ஐதராபாத் சார்மினார் விரைவு ரயில் இன்று 18.10 மணியளவில் புறப்படும். இது ரேணிகுண்டா குடூர் வழியாகச் செல்லும்.

வண்டி எண். 12655 அகமதாபாத்-சென்னை நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் குடூர் ரேணி குண்டா வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது

வண்டி எண் 12603 சென்னை-ஐதராபாத் விரைவு ரயில் ரேணிகுண்டா, குடூர் வழியாக வந்து சேரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x