Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 03:13 AM

உலகில் ஆண்டுதோறும் 1 கோடி பேருக்கு காசநோய்: சுகாதாரத் துறை செயலர் தகவல்

உலக காசநோய் விழிப்புணர்வு தினம் நிகழ்ச்சி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதில், ‘மறைமுக காசநோய்’ மற்றும் ‘சிகிச்சைக்கு கடினமான காசநோய்’ ஆகிய நூல்களை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். மருத்துவமனை டீன் பு.பாலாஜி, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

சென்னை

உலகில் ஆண்டுதோறும் 1 கோடிபேர் காசநோயால் பாதிக்கப்படுவதாக சுகாதாரத் துறைச் செயலர்ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக காசநோய் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மருத்துவமனை டீன்பு.பாலாஜி தலைமை தாங்கினார்.இதில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், ‘மறைமுக காசநோய்’ மற்றும்‘சிகிச்சைக்கு கடினமான காசநோய்’ ஆகிய நூல்களை வெளியிட்டார். தொடர்ந்து காசநோய் மற்றும்கரோனாவைக் கட்டுப்படுத்த,‘அனைவருக்கும் முகக் கவசம்’பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “2021-ம் ஆண்டின் உலககாசநோய் தினத்தின் கரு ‘நேரம் நெருங்குகிறது - நமது இலக்கை அடைய’ என்பதாகும். காச நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு, அதில் 10 லட்சம் பேர்இறக்கின்றனர். தமிழகத்தில் கடந்தஆண்டு 62 ஆயிரம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

காசநோயாளிகளுக்கும் இதரநுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக கரோனா தொற்று எளிதில்ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் முகக் கவசம் அணிந்து. சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x