Published : 21 Nov 2015 08:46 AM
Last Updated : 21 Nov 2015 08:46 AM

தூர்வார ஒதுக்கிய நிதியை செலவு செய்யாததால் பேரழிவு: இந்திய கம்யூ. குற்றச்சாட்டு

ஆறு, ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை தூர்வாருவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழிக்கப்படாததால் பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழக அரசு வடகிழக்குப் பருவ மழையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆறு, ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை தூர்வாருவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவழிக்கப்படாததால் இப்பேரழிவு ஏற்பட் டுள்ளது.

இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். தொற்று நோய் பரவாமல் தடுக்க போதிய மருந்து, மாத்திரை இருப்பு வைக்க வேண்டும். கிராமங்களுக்கு மருத்துவக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தை இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x