Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM

இரட்டை பாதை இணைப்பு பணியால் தென்மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்

கோப்புப்படம்

மதுரை

திருமங்கலம்-துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடை பெறுவதால் ரயில் போக்குவரத்தில் கீழ்க் கண்ட மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

திருச்சி- திருவனந்தபுரம்-திருச்சி சிறப்பு ரயில் மார்ச் 21 முதல் மார்ச் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மார்ச் 25-ல் சென்னையிலிருந்து புறப்படும் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் மற்றும் மார்ச் 26-ல் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 28, மார்ச் 29-ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில், மார்ச் 29, மார்ச் 30 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

மார்ச் 20 முதல் மார்ச் 29 வரை குருவாயூரில் இருந்து புறப்படும் குருவாயூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மற்றும் மார்ச் 21 முதல் 30 வரை சென்னையிலிருந்து புறப்படும் சென்னை எழும்பூர் - குருவாயூர் சிறப்பு ரயில் ஆகியவை திருநெல்வேலி - சென்னை எழும்பூர் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 25 முதல் மார்ச் 29 வரை சென்னையில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை சிறப்பு ரயில் மற்றும் மார்ச் 26 முதல் மார்ச் 30 வரை திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவை மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 21 முதல் மார்ச் 30 வரை நாகர்கோவில்-கோயம்புத்தூர்-நாகர் கோவில் சிறப்பு ரயில்கள் நாகர்கோவில் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 26 முதல் மார்ச் 29 வரை புனலூரில் இருந்து புறப்படும் புனலூர் - மதுரை சிறப்பு ரயில் மற்றும் மார்ச் 27 முதல் மார்ச் 30 வரை மதுரையில் இருந்து புறப்படும் மதுரை - புனலூர் சிறப்பு ரயில் ஆகியவை திருநெல்வேலி - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 26 முதல் மார்ச் 29 வரை கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் மற்றும் மார்ச் 27 முதல் மார்ச் 30 வரை நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் ஆகியவை மதுரை - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 29 அன்று மைசூரில் இருந்து புறப்படும் மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் மற்றும் மார்ச் 30 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்படும் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் ஆகியவை மதுரை - தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 25 முதல் மார்ச் 27 வரை சென்னையில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு சிறப்பு ரயில் மற்றும் மார்ச் 26 முதல் மார்ச் 28 வரை செங்கோட்டையில் இருந்து புறப்படும் செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு சிறப்பு ரயில் ஆகியவை மானாமதுரை - செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 30 அன்று நாகர்கோவில் மும்பை சிஎஸ்டி சிறப்பு ரயில் திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திருவனந்தபுரம், சோரனூர் கேரள மாநில ரயில் பாதை வழியாக இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x