Published : 17 Mar 2021 03:15 AM
Last Updated : 17 Mar 2021 03:15 AM

விழுப்புரம் மாவட்டத்தில் பெண்கள், சிறார்க்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவுக்கு ‘பிங்க் பேட்ரோல்’ அமைப்பு

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் முதல் புதிதாக ஏற்படுத்தப்பட்டு ஏடிஎஸ்பி மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ‘போக்சோ’ உள்ளிட்ட புகார்,வழக்கு விவரங்களை இப்பிரிவு போலீஸார் சேகரித்து வருவதோடு முக்கியசம்பவங்கள் பற்றி அரசுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து, மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மதுவிலக்கு பிரிவிலுள்ள இன்ஸ்பெக்டர்களே இதுதொடர்பான புகார்,விசாரணையை கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான புகார், வழக்கு விசாரணைகளை உடனடியாக இப்பிரிவுக்கு தெரிவிக்க காவல் நிலையங் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு இதற்காக ஒவ்வொரு காவல் நிலை யத்திலும் ஒரு பெண் காவலர் நியமிக் கப்பட்டுள்ளார்.

தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் இப்பிரிவுக்கென்று ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் விழுப்புரம் எஸ்பிஎஸ்.ராதாகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் டி.ஜி.பி. அலுவலகம் மூலமாக விழுப்புரம் மாவட்ட பெண்கள், குழந் தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரி வுக்கு முதற்கட்டமாக 18 ஸ்கூட்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்திறங்கின. இந்த வாகனங்கள் அனைத்தும் இளஞ்சிவப்பு நிறமுடையது.

இதுகுறித்து பெண்கள், குழந்தை களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி தேவநாதன் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் இந்தப்பிரிவுக்கு 18 வாகனங்கள் வழங்கப்பட் டுள்ளன. புகார் தொடர்பாக விசாரிக்கசெல்ல இந்த வாகனங்கள் வரவழைக்கப் பட்டுள்ளன.

கிராமங்கள் அதிகம் நிறைந்த போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியிலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடந்துள்ளதாக கண்டறியப்படும் இடங்களிலும் இந்த வாகனங்களை தயார் நிலையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கும், பெண் போலீ சுக்கும் இந்த வாகனங்கள் வழங் கப்படும். எந்த கார ணத்தை கொண்டும் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது.

நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு வாக னங்களில் ‘ஹைவே பேட்ரோல்’ என்று எழுதப்பட்டுள்ளதைப் போன்று இந்த வாகனங்களின் முன்புற பகுதியில் ‘பிங்க் பேட்ரோல்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதன் அருகிலேயே குழந்தை களுக்கு எதிரான குற்றம் தொடர்பான புகார் தெரிவிக்க 1098 என்ற எண்ணும், பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான புகார் தெரிவிக்க 181 என்ற எண் ணும் எழுதப்பட்டிருக்கும் ஸ்டிக்கரும் ஒட்டப்படும்.

இந்த வாகனத்தில் வந்தால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவித்தால் உட னுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். குறிப்பாக பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் இந்த வாகனங்களை நிறுத்தி வைக்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x