Published : 14 Mar 2021 06:35 PM
Last Updated : 14 Mar 2021 06:35 PM

அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை: அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ்-இபிஎஸ் வெளியிட்டனர்

திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியான நிலையில் இன்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் சென்னையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முக்கிய அம்சமாக அம்மா வாஷிங் மெஷின், அனைவருக்கும் வீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், அல்லது தங்கள் கட்சி கூட்டணியில் இருந்தால் இந்தவகையான மக்கள் பிரச்சினைகளை தீர்ப்போம், இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிப்போம் என்றெல்லாம் வாக்குறுதி போன்று அளிப்பார்கள்.

திமுக நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல அம்சங்கள் இடம் பெற்று அதற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. அதிமுக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதைவிட அதிக ஸ்கோர் செய்யும் வகையில் அதில் அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் வந்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

அம்மா வாஷிங் மெஷின் திட்டம்

அனைவருக்கும் வீடு- அம்மா இல்லம் திட்டம்

மகளிருக்கு பேருந்துச் சலுகை

தொலை நோக்கு திட்டம் 2023

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம்

உணவு மானியம்

அனைவருக்கும் சூரிய சக்தி சமையல் அடுப்பு

கல்விக்கடன் தள்ளுபடி

மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி டேட்டா

யுபிஎஸ்சி , ஜேஇஇ நீட் பயிற்சி மையம்

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை

முதியோர் ஓய்வூதியத் திட்டம் ரூ.2000 ஆக உயர்வு

திருமண உதவி திட்டம் உயர்வு

கொசுவலை வழங்கும் திட்டம்

மத்திய அரசுப்பணியில் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம்

எழுவர் விடுதலை

நீதிமன்றத்தில் தமிழ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x