Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM

மானாமதுரையில் அதிமுக, திமுக நேரடி போட்டி: அனல் பறக்கும் தேர்தல் களம்

மானாமதுரை

தமிழர் நாகரிகத்தை உலகுக்கு உரக்கச் சொன்ன கீழடி அமைந்த தொகுதி தான் மானாமதுரை (தனி). மேலும் மானாமதுரை கடம், மண்பாண்டப் பொருட்கள் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இத்தொகுதி 1952-ம் ஆண் டிலேயே உருவாக்கப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பில் இளை யான்குடி தொகுதி கலைக்கப்பட்டு, கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் மானாமதுரை தொகுதியுடன் சேர்க்கப்பட்டது. தற்போது மானாமதுரை, இளையான்குடி, திருப் புவனம் ஆகிய 3 பேரூராட்சிகள், அதே மூன்று ஒன்றியங்களைச் சேர்ந்த 126 ஊராட்சிகள் உள்ளன.

பிரதான தொழிலாக விவசாயம், செங் கல்சூளை, மண்பாண்டம் தயாரிப்பு, கரிமூட்டம் போன்றவை உள்ளன. இங்கு முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், யாதவர், பிள்ளைமார், முத்தரையர், முஸ்லிம்கள் உள்ளிட்ட சாதியினர் வசிக்கின்றனர்.

கடந்த ஜன.20-ம் தேதி வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் நிலவரப்படி, 1,36,397 ஆண்கள், 1,40,354 பெண்கள், 10 மூன்றாம் பாலினத்தவர் என 2,76,761 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் முதல் தேர்தலில் கிருஷ்ணசாமி அய்யங்கார் (காங்கிரஸ்) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது பெருமையாகக் கூறப்படுகிறது.

இதுவரை இத்தொகுதியில் 5 முறை அதிமுக, 3 முறை காங்கிரஸ், சுதந்திரா, திமுக ஆகியவை தலா 2 முறை, கம்யூனிஸ்ட், தமாகா, சுயேச்சை தலா ஒருமுறை வென்றுள்ளன.

கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வென்று அதிமுக இத் தொகுதியை தங்கள் வசம் வைத் துள்ளது. மேலும் 2016-ம் ஆண்டு அதிமுக சார்பில் வென்ற மாரியப்பன் கென்னடி டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதி முக சார்பில் நின்ற எஸ்.நாகராஜன் வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தலிலும் அவரே அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தேர்தல் வாக் குறுதியில் கூறியபடி திருப்புவனம், இளையான்குடி பேருந்து நிலையம் வராதது, மானாமதுரை தரைப்பாலம் கட்டி முடிக்காதது, தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் சுற்று லாத்தலமாக அறிவிக்காதது போன்ற குறைகள் உள்ளன.

இடைத்தேர்தலில் வென்று குறுகிய காலத்தில் மானாமதுரை தரைப்பாலம் கட்ட அரசாணை பெற்றது. திருப் புவனத்தில் தேங்காய்க் கொள்முதல் நிலையம் திறந்தது போன்றவற்றை சாதனையாக எம்எல்ஏ கூறுகிறார்.

வேட்பாளருக்கு காத்திருக்கும் சவால்கள்

மானாமதுரை அரசு போக்குவரத்து பணிமனை முழுமையாகச் செயல் படுத்த வேண்டும். மானாமதுரை தரைப் பாலத்தை விரைந்து கட்டி செயல்படுத்த வேண்டும். மானாமதுரையில் கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். மானாமதுரை சிப்காட் விரிவாக்கம், இளையான்குடியில் மிளகாய் கொள் முதல் நிலையம், திருப்புவனம், இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்டவை நீண்டகாலக் கோரிக்கைகளாக உள்ளன.

இந்தத் தேர்தலில் அதிமுக சார் பில் சிட்டிங் எம்எல்ஏவான எஸ். நாகராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் நின்று தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் தமிழர சிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. அமமுக சார்பில் தகுதி நீக்கத்தால் எம்எல்ஏ பதவியை இழந்த மாரியப்பன்கென்னடி மூன்றாவது முறை யாக போட்டியிடுகிறார். இதுதவிர நாம் தமிழர் கட்சி சார்பில் சண்முகபிரியா போட்டியிடுகிறார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, அமமுக போட்டியிடுவது போன்றவை அதிமுக வேட்பாளருக்கு பாதகமாக உள்ளன. அதேபோல் திமுக உள் ளூர் நிர்வாகிகள் மதுரையைச் சேர்ந்த தமிழரசி நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அவருக்கு பாதகமாக அமைந்துள்ளது.

இதுதவிர பெரிய கட்சிகளின் கூட்டணி பலமின்றி போட்டியிடுவதால் அமமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு பாதகமாக உள்ளது.

தொடர்ந்து 4 முறை வென்ற அதிமுக 5-வது முறையாக இத்தொகுதியை தக்க வைக்கவும், இந்த முறை அத் தொகுதியை மீட்க திமுகவும் போராடி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x