Published : 12 Mar 2021 03:13 AM
Last Updated : 12 Mar 2021 03:13 AM

திமுக கூட்டணி கட்சிகளால் தவிடுபொடியான ‘ஐபேக்’ திட்டம்

கோப்புப்படம்

மதுரை

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் ஸ்டாலின் இந்த முறை மிகவும் கறாராகச் செயல் பட்டு கணிசமான தொகுதிகளைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டு, அதே சமயம் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடும் என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி கூட்டணிக் கட்சிகளை மாற்று அணிகளுக்குத் தாவாமல் பார்த்துக் கொண்டார்.

ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டில் மிக சாமர்த்தியமாக நடந்து கொண்ட ஸ்டாலினால், எந்தெந்த தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் கறாராக நடந்து கொள்ள முடியவில்லை. ‘ஐபேக்’ நிறுவனம் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடக்கூடிய தொகுதிகளை முன்கூட்டியே பட்டியலிட்டு, ஸ்டாலின் வசம் கொடுத்து வைத்திருந்தது. அதன் அடிப்படையிலேயே தொகுதிப் பங்கீட்டை திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளிடம் நடத்தியது.

திமுக வெற்றிபெறும் என்று ஐபேக் அளித்த பட்டியலில் உள்ள தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகள் கேட்டு அடம்பிடித்ததாலேயே தொகுதிப் பங்கீட்டில் இழு பறி ஏற்பட்டது. தற்போது வேறு வழியில்லாமல் கூட்டணிக் கட்சிகள் கேட்ட பல தொகுதிகளை திமுக விட்டுக் கொடுக்கும்நிலைக்குத் தள்ளப்பட்டது. அதனால், ஐபேக் தயாரித்துக் கொடுத்த திமுகவின் வெற்றிவாய்ப்புள்ள பல தொகுதிகள் தற்போது அதன் கூட்டணிக் கட்சிகளுக்குச் சென்றுவிட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளி லும் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாகவும், அதில் நத்தம் தொகுதியில் மட்டும் அதிமுக கடும் போட்டியைக் கொடுக்கக்கூடும் என்றும், அதனால், அந்த மாவட்டத்தில் ஒரு தொகுதியையும் கூட் டணிக்கு விட்டுக் கொடுக்காமல் திமுக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடலாம் என ஐபேக் பரிந் துரைத்திருந்தது.

ஆனால், அந்த மாவட்டத்தில் திண்டுக்கல், நிலக்கோட்டை இரு தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்எல்ஏவாக உள்ள திண்டுக்கல் தொகுதியை கூட்டணிக்கு விட்டுக் கொடுத்ததால் அமைச்சர்களை எதிர்த்து திமுக களம் இறங்க வேண்டும் என்ற திமுகவின் கொள்கை திண்டுக்கல் மாவட்டத்தில் கைவிட்டுப்போனது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுகவின் தற்போதைய எம்எல்ஏ தொகுதி தளியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிடிவாதத்தால் அக்கட்சிக்கு விட்டுக் கொடுத்தது. இதுபோல், மதுரை, விருதுநகர் உட்பட தமிழகம் முழுவதும் திமுக போட்டியிட இருந்த பல தொகுதிகளை கூட்டணிக் கட்சிகள் வலுக்கட்டாயமாகக் கேட்டுப் பெற்றுள்ளதால் ‘ஐபேக்’ திட்டம் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தவிடு பொடியாகிப்போனது. அதனால், ஸ்டாலின் தர்மசங் கடத்துக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x