Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

அதிமுக அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை குறித்து நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை

அதிமுக சார்பில் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேர்தல் அறிக்கை தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்,இபிஎஸ் ஆகியோர் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கஉள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது, வேட்பாளர் தேர்வு போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆளுங்கட்சியான அதிமுக தற்போது பாமக,பாஜகவுடன் தொகுதிகள் ஒதுக்கீட்டை முடித்துவிட்ட நிலையில்,தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறது.இந்த கட்சிகளுடனும் தொகுதிஒதுக்கீட்டை 8-ம் தேதிக்குள் (நாளை) முடித்து, அக்கட்சிகளுக்குதொகுதிகளை ஒதுக்கி, அதிமுகபோட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் விரைவில் அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, 6 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக நேற்று முன்தினம்வெளியிட்டது. அதன்படி, போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி - பழனிசாமி, ராயபுரம் - டி.ஜெயக்குமார், விழுப்புரம் - சி.வி.சண்முகம், வைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை (தனி) - எஸ்.தேன்மொழிஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, கூட்டணிகட்சிகள் கேட்காத, அதிமுகவுக்கான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. தவிர, அதிமுக தேர்தல் அறிக்கையும் தயாராகி, ஓபிஎஸ், இபிஎஸ்ஸிடம் 5-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் நேற்று காலை 10.30 மணிக்குஅதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் துணை ஒருங்கிணைப்பாளர்கள், மூத்த அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் பிற்பகல் 2:30 மணி வரை தீவிர ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:

தேர்தல் அறிக்கையில் மாணவர்கள், பெண்கள் நலன் சார்ந்த புதியஅறிவிப்புகள் குறித்தும், அவற்றைசெயல்படுத்துவதில் உள்ள சாதக,பாதகங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 2 வேட்பாளர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கூட்டணி தொகுதி பங்கீடுகள் முடிந்ததும், அடுத்தகட்டவேட்பாளர் பட்டியல் மார்ச் 8அல்லது 10-ல் வெளியிடப்படலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x