Published : 04 Mar 2021 18:21 pm

Updated : 04 Mar 2021 18:21 pm

 

Published : 04 Mar 2021 06:21 PM
Last Updated : 04 Mar 2021 06:21 PM

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'; தேதி மாற்றம் - மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் 6-ம் கட்ட பிரச்சாரம்: திமுக அறிவிப்பு

mk-stalin-6th-phase-election-campaign
ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' 6-ம் கட்ட பிரச்சாரம், மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என, திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்.6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன.


திமுக சார்பில், தேர்தலை முன்னிட்டு, மக்கள் கிராம சபைக் கூட்டங்கள், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' ஆகிய பிரச்சார நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதில், அந்தந்த பகுதி பிரச்சினைகளை பொதுமக்கள் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைக்கின்றனர். மேலும், இதில், மு.க.ஸ்டாலின் அதிமுக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் தமிழக அமைச்சர்களையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இதுவரை, பல்வேறு மாவட்டங்களில் இப்பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள ஸ்டாலின், ஐந்து கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' 6-ம் கட்ட பிரச்சாரத்தை, மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் மேற்கொள்வார் என நேற்று (மார்ச் 3) திமுக தலைமைக்கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், அந்த தேதியை மாற்றியுள்ள திமுகதலைமை அலுவலகம், மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் 6-ம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்வார் என அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமை அலுவலகம் இன்று (மார்ச் 4) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தவறவிடாதீர்!


திமுகமு.க.ஸ்டாலின்உங்கள் தொகுதியில் ஸ்டாலின்தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்2021 சட்டப்பேரவைத் தேர்தல்DMKMK stalinTN assembly election2021 assembly electionONE MINUTE NEWSPOLITICSதேர்தல் 2021

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x