Published : 03 Mar 2021 10:01 PM
Last Updated : 03 Mar 2021 10:01 PM

2011 தேர்தலில் கூட்டணி இல்லாவிட்டால் அதிமுக என்ற கட்சியே இன்று இருந்திருக்காது: எல்.கே.சுதீஷ் பேச்சு

போளூர்

2011 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கட்சியோடு தேமுதிக கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அதிமுக என்ற ஒரு கட்சியை இருந்திருக்காது என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆர்.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச்-3) நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எல்.கே.சுதீஷ் பேசும்போது, ‘‘கடந்த 2011 தேர்தலில் நாம் அதிமுக கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அதிமுக என்ற ஒரு கட்சியை இருந்திருக்காது. அப்போது,நாமும் வெற்றிபெற்று தமிழ்நாட்டில் எதிர்கட்சியாக வந்தோம். இன்று நாம் கூட்டணிக்காக கெஞ்சவில்லை. அவர்கள் தான் நம்மிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர். வேண்டும் என்றால் என் தொலைபேசியில் எத்தனை அழைப்புகள் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

நான் போகும்போது எந்ததெந்த கட்சியில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது என்று மாவட்டச் செயலாளரிடம் காட்டிவிட்டு செல்கிறேன்.எல்லா கட்சியில் இருந்தும் பேசுகிறார்கள்.விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால் நாங்கள் வரத் தயார் என்கின்றனர். நமது கட்சியின் அங்கீகாரம், முரசு சின்னம் வேண்டும் என்றால் 8 எம்எல்ஏக்கள் வெற்றிபெற வேண்டும். அதற்காகத்தான் கூட்டணியில் இருக்கிறோம். பேசிப் பார்ப்போம்.

10.5 சவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று நினைக்கின்றனர். அது நல்ல விஷயம்தான். அப்ப மற்ற சாதியினரின் ஓட்டுகள் தேவையில்லையா? தேமுதிக கூட்டணியுடன் ஆட்சி அமையும்போது அந்த இட ஒதுக்கீட்டை நாமே வாங்கிக் கொடுப்போம். இப்போது கொடுத்திருப்பது 6 மாதம்தான். நமது கூட்டணியை மூன்று நாளில் விஜயகாந்த் முடிவு செய்வார்.

எந்தக் கூட்டணியாக இருந்தாலும் நாம் ஜாக்கிரதையாக வேலை செய்ய வேண்டும். நாலு மாவட்டத்தில் எந்த தொகுதி கிடைக்கிறதோ அந்த இடத்தில் அனைத்து தேமுதிகவினரும் வேலை செய்ய வேண்டும். இன்னும் 3 மாதங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான நகராட்சி, பேரூராட்சிகளில் இடம் வாங்கித் தரப்படும்.

இந்த தேர்தலில் திமுக, அதிமுகவும் சமமாக இருக்கிறார்கள். தேமுதிக சேரும் இடம் அமோகமாக வெற்றி பெறும். ராஜ்யசபா சீட்டுக்காக நான் ஆசைப்பட்டதே இல்லை. நான் நினைத்திருந்தால் 2009, 2014-ல் வாங்கி இருப்பேன். தேர்தலில் வெற்றிபெற்று செல்ல வேண்டும் என்று விஜயகாந்தும் நானும் நினைக்கிறேன்.

2019-ல் நமக்கு கொடுத்த ராஜ்யசபா சீட்டைத்தான் விஜயகாந்தின் நல்ல நண்பர் ஜி.கே.வாசனுக்கு கொடுத்தார்கள்’’ என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x