Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 03:23 AM

கோவை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம் வெளியீடு

கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆர்.குமரேசன் (அலைபேசி எண் : 94450 00245), சூலூர் தொகுதிக்கு நகர்ப்புற நிலவரி உதவி ஆணையர் வி.சாந்தி (99949 68613), கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ஜி.ரவிச்சந்திரன் (9445924164), கோவை வடக்கு தொகுதிக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் தனி துணை ஆட்சியர்உ.முருகேசன் (94422 92741), தொண்டாமுத்தூர் தொகுதிக்கு கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜே.செந்தில்அரசன் (94450 00442), கோவை தெற்கு தொகுதிக்கு கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் த.சிவசுப்பிரமணியன் ( 94892 06055), சிங்காநல்லூர் தொகுதிக்கு கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர்சி.ராம்குமார் (94430 89804), கிணத்துக்கடவு தொகுதிக்கு கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எம்.அம்சவேணி (94454 77853), பொள்ளாச்சி தொகுதிக்கு பொள்ளாச்சி சார் ஆட்சியர் ஆர்.வைத்திநாதன் (94450 00445), வால்பாறை தொகுதிக்கு கோவை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் பி.துரைசாமி (63827 93328) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கபட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800-425-4757 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது வட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், கோவை மாநகராட்சி மத்திய மற்றும் கிழக்கு மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களிலோ விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்தில் கடந்த மக்களவைதேர்தலில் 3,048 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 1,050 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள் 2 ஆக பிரிக்கப்பட்டு, புதியதாக 1,379 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தால் கொண்டு வரப்பட்ட, cVigil செயலி மூலமும் புகார்களை பொதுமக்கள் வீடியோ அல்லது புகைப்படம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x