Published : 19 Nov 2015 08:19 AM
Last Updated : 19 Nov 2015 08:19 AM

தற்காலிக பண்ணை பசுமை கடைகள் மூலம் ஒரே நாளில் 23.5 டன் காய்கறி விற்பனை

தமிழக அரசு சார்பில் சென்னையில் 50 இடங்களில் தற்காலிக பண்மை பசுமை கடைகள் நேற்று திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கனமழை காரண மாக, காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை வேகமாக உயர்ந் துள்ளது. காய்கறி விலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் சென்னையில் 50 இடங்களில் தற்காலிக பண்ணை பசுமை கடைகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் அறிவித்திருந் தார். அதனைத் தொடர்ந்து, 50 இடங்களில் தற்காலிக பண்ணை பசுமை கடைகள் திறக்கப்பட்டன.

இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: கூட் டுறவு சங்கங்கள் சார்பில் 39 கடை களும், பொது விநியோகக் கழகம் சார்பில் 11 கடைகளும் திறக்கப் பட்டுள்ளன. இக்கடைகளில் தின மும் 15 டன் காய்கறிகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தோம். மழை விட்டுள்ள நிலையில் அதிக அளவில் மக்கள் காய்கறிகளை வாங்குவார்கள் என கருதி, முதல் நாள் விற்பனைக்கு 23 டன் காய்கறிகளை கிருஷ்ணகிரி மாவட்டம் செட்டிப்பள்ளி, பாகலூர், பேரிகை போன்ற பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக கொள்முதல் செய்துள்ளோம்.

இந்த கடைகளில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, புடலங்காய், கத்தரிக்காய், பீட்ரூட், வெண்டைக்காய் ஆகிய 7 வகை யான காய்கறிகள் விற்பனை செய் யப்படுகின்றன. தற்போது வெளிச் சந்தையில் உள்ள விலையை விட இங்கு மிகக் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட காய்கறி கள் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. பின்னர் அந்தந்த கடைகளின் தேவை அறிந்து, அதற் கேற்றவாறு கூடுதல் காய்கறிகள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப் பட்டன. இக்கடைகள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதனால் இன்றைய (வியாழக் கிழமை) விற்பனைக்கு 3 டன் கூடுதலாக 26 டன் காய்கறிகளை கொள்முதல் செய்திருக்கிறோம். ஒரே நாளில் 23.5 டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.

மக்கள் வரத்து அதிகரிப்பு

கனமழை விட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு பிறகு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க அதிக அளவில் பொதுமக்கள் நேற்று வந்திருந் தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை யன்று விற்பனை செய்யப்பட்டதை விட நேற்று காய்கறிகளின் விலை குறைவாக இருந்தது. வியாசர் பாடி, கொடுங்கையூர் முத்தமிழ் நகர், அமைந்தகரை, மயிலாப்பூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதி களில் சாலையோர கடைகளிலும் காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x