Last Updated : 28 Nov, 2015 08:34 AM

 

Published : 28 Nov 2015 08:34 AM
Last Updated : 28 Nov 2015 08:34 AM

அதிக அளவில் நீரை தேக்கி வைத்து வெளியேற்றியதால் சென்னைக்கு குடிநீர் தரும் வீராணம் ஏரியில் வெள்ளப்பெருக்கு: கடலூர் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி

வீராணம் ஏரியில் அதிகளவு தண் ணீரை தேக்கிவைத்து மழை பெய்த சமயத்தில் நீரை திறந்து விட்டதால் வெள்ளம் ஏற்பட்டு 100 கிராமங்களில் தண்ணீர் புகுந்த தோடு 50 ஆயிரம் ஏக்கர் நிலம் மூழ்கியதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய நீர் ஆதாரமான வீராணம் ஏரியின் உயரம் 47.50 அடி. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டப் பகுதியில் 85 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இதன் மூலம் பாசன வசதி பெறுகிறது. மேட்டூரில் இருந்து வரும் தண்ணீர், கீழணைக்கு வந்து அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது.

மழைக் காலங்களில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீரும் கருவாட்டு ஓடை வழி யாக வடவாற்றில் கலந்து வீராணம் ஏரிக்கு செல்கிறது. இது தவிர, செங்கால் ஓடை வழியாக வரும் தண்ணீர் நேரடியாக வீராணம் ஏரியில் கலக்கிறது. ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்கு தினமும் விநாடிக்கு 76 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. சென் னைக்கு குடிநீர் அனுப்புவதில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற் காக ஏரியில் அதிக அளவில் தண்ணீரை பொதுப்பணித் துறையி னர் தேக்கி வைத்து வந்தனர். மழைக் காலத்தில் இதுபோல அதி களவு தண்ணீரை தேக்கி வைக்க வேண்டாம் என விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத் தலைவர் கள் கூறியதை அதிகாரிகள் கேட்கவில்லை.

18 ஆயிரம் கனஅடி நீர்

இந்தச் சூழ்நிலையில், கடந்த 9-ம் தேதி கடலூர் மாவட்டம் முழு வதும் கனமழை பெய்து ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. பல ஊர்களில் தண்ணீர் புகுந்தது. தொடர் மழையால் வீராணம் ஏரிக்கும் அதிகளவில் தண்ணீர் வந்ததால் திடீரென தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பிரதான வடிகால் மதகான வெள்ளியங்கால் மதகில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி, விஎன்எஸ்எஸ் வடிகால் மதகு வழியாக விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி என தண்ணீர் திறந்து வெள்ளாற்றில் விடப் பட்டது. ஒரே சமயத்தில் வீராணம் ஏரியில் இருந்து 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப் பட்டதால் திருநாரையூர், வீரநத்தம், சர்வராஜன்பேட்டை, கீழவன்னீயூர், நந்திமங்கலம், நடுத்திட்டு, குமராட்சி உள்ளிட்ட 50 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. இதுபோல வெள்ளாற்றில் தண்ணீர் திறந்து விட்டதால் அள்ளூர், பூதங்குடி ஒரத்தூர், பரதூர், ஓடக்கநல்லூர், கிளியனூர் உள்ளிட்ட 50 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் தண்ணீரில் மூழ்கியது. மழை பெய்துகொண்டிருந்த சமயத்தில் வீராணம் ஏரியில் தண்ணீரை திறந்துவிட்டதால் வெள்ளபாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகளும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுப்பணித்துறை மீது புகார்

இதுகுறித்து காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த பாமக மாவட்ட தலைவர் பூக்கடை கண் ணன் கூறும்போது, “பொதுப்பணித் துறை அதிகாரிகள் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதற்காக ஏரியில் தொடர்ந்து தண்ணீரை தேக்கி வைத்து, மழை நேரத்தில் திறந்துவிட்டனர்.

இதனால், பலர் வீடுகளை இழந்தனர். விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி விவ சாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

கீழவன்னீரைச் சேர்ந்த விவசாயி ரவி கூறும்போது, “வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்கி றோம். பொதுப்பணித்துறை அதி காரிகளில் செயலால் மழை நீரும், ஏரி நீரும் சேர்ந்து விளைநிலங்களில் பேரழிவை ஏற்படுத்திவிட்டன. நெல், வாழை, வெற்றிலை போன் றவை அழிந்துவிட்டன. மழைக்கு முன்பு விவசாயத்துக்கு தண்ணீர் திறந்துவிட மறுத்த அதிகாரிகள், மழை பெய்ததும் ஏரியில் தண் ணீரை தேக்க முடியாமல் திறந்து விட்டுள்ளனர்.எனவே, பொதுப் பணித்துறை அதிகாரிகள்தான் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” என்றார்.

பொதுமக்கள் மற்றும் விவசாயி களின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்பதற்காக பொதுப் பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது யாரும் பதிலளிக்கவில்லை.

அனைவரும், மத்திய குழுவுடன் வெள்ளச்சேத பகுதிகளை பார் வையிட சென்று இருப்பதாக கூறப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x