Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

மதுரை அருகே ரூ.89 கோடியில் 1088 வீடுகள்: பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்

மதுரை

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் மதுரையில் கட்டப்பட்டுள்ள 1088 அடுக்குமாடி வீடுகளை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கோயம்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் மதுரை அருகே ராஜாக்கூரில் கட்டப்பட்ட 1088 அடுக்குமாடி வீடுகளும் அடக்கம். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் ரூ.89.75 கோடியில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.8.25 லட்சத்தில் தலா 400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள 1088 வீடுகள் மதுரை மாநகரில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்போருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளிகள் பங்குத்தொகை ரூ.19.03 கோடி ஆகும்.

இதனை பிரதமர் தொடங்கி வைத்த போது, ராஜாக்கூரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ஆட்சியர் த.அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விரைவில் இந்த வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x