Published : 16 Nov 2015 09:59 AM
Last Updated : 16 Nov 2015 09:59 AM

விழுப்புரம் மாவட்டத்தில் கடும் மழை பாதிப்புக்கு மேலும் 5 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழைக்கு ஏற்கெனவே 3 பேர் இறந்த நிலையில், நேற்று மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் அருகே சின்ன கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, நேற்று செங்கல் சூளை பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

விழுப்புரம் சின்னக்குப்பத் தைச் சேர்ந்தஅல்லியம்மாள், ஓடையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருநாவலூர் அருகே கீழக்குப்பம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(35). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வயலுக்கு செல்லும் வழியில் ஓடையைக் கடக்க முயன்ற போது, காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

திருவெண்ணைநல்லூர் அருகே ஆனைவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரம்மாள்(67). இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல தனது வீட்டில் தூங்க சென்றார்.

நேற்று காலை வெகு நேரமாகி யும் அவரின் வீடு திறக்கப்படாத தால், அக்கம்பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு குளிர் தாங் காமல் அவர் இறந்தது தெரியவந் தது.

விழுப்புரம் ரெட்டியார் மில் அருகே உள்ள குட்டையில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் மிதந்ததை நேற்று அப்பகுதியில் வசிப்பவர்கள் பார்த்தனர். விழுப்புரம் தாலுகா போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த உடல் மீட்கப்பட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு உட்பட்ட போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x