Last Updated : 13 Nov, 2015 11:08 AM

 

Published : 13 Nov 2015 11:08 AM
Last Updated : 13 Nov 2015 11:08 AM

உடமைகள் ஏதுமின்றி நிர்கதியாய் நிற்கிறோம்: கதறும் கடலூர் மக்கள்

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பண்ருட் டியை அடுத்த பெரியக்காட்டுப் பாளையம் மற்றும் விசூர் கிராமம் பெரும் சேதத்துக்குள்ளானது. இவற்றில் பெரியகாட்டுப் பாளையத்தில் நீர்வழிப் புறம் போக்கில் வசித்து வந்தவர்களில் பெருமாள் என்பவரின் குடும்பத்தில் 8 பேர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். எஞ்சியவர்களில் பெருமாளின் மனைவி அமிர்தம்மாள் மற்றும் மருமகன் வீரமணி ஆகியோர் மட்டுமே உயிரோடு உள்ளனர்.

முகாமில் தங்கியிருந்த வீரமணியிடம் கேட்டபோது, நீர்வழிப் புறம்போக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தோம்.ஆனால் எங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படவே இல்லை. இந்த நிலையில் வெள்ளத்தில் எனது குடும்பம் முழுவதையும் இழந்து தவித்துவருகிறோம். அரசு நிவாரண உதவிகள் கிடைத்துள்ளது. இதுதவிர எங்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என்றார்.

அம்பிகா என்பவர் கூறும்போது, மாற்றுத் துணிக்கூட இல்லாத நிலையில் உள்ளோம். சமைக்க பாத்திரம், அடுப்பு உள்ளிட்டவை எதுவும் இல்லை.

முதற்கட்டமாக எங்களுக்கு ரேஷன் கார்டு, பிள்ளைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் முதற்கொண்டு, சாதிச்சான்றிதழ், கல்விச் சான்றிதழ் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.பூதம்பாடியைச் சேர்ந்த விஜயா என்பவர் கூறும்போது, உணவு கொடுக்கின்றனர்,ஆனால் படுக்க இடமில்லை. இரவில் பெரும் தவிப்புக்குள்ளாகியிருக்கிறோம். நிவாரண முகாம்களிலும் மின்வசதி இல்லாததால் அச்சத்துடன் உறங்க நேரிடுகிறது. இயற்கை உபா தைக்கு வழி செய்யப்பட வேண்டும், எங்களுக்கு மாற்று இடம் வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x