Last Updated : 13 Nov, 2015 09:48 AM

 

Published : 13 Nov 2015 09:48 AM
Last Updated : 13 Nov 2015 09:48 AM

பள்ளிக் குழந்தைகளுக்கு மனப்பாட செய்யுள்களை இசைப் பாடலாக்கிப் பயிற்சியளிக்கும் கண்பார்வை இழந்த ஆசிரியை

பள்ளிக் குழந்தைகள் மனப்பாட செய்யுள்களை எளிதாக படிக்கும் வகையில் அவற்றை இசைப் பாடல் களாக்கி பயிற்சியளித்து வருகிறார் உத்தரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இசை ஆசிரியை மாரியம்மாள் (34).

மூன்றாவது வயதில் தாக்கிய பெரியம்மை நோயினால் தனது பார் வைத் திறனை இழந்தவர். இருப்பி னும் மனம் சோர்ந்துவிடாமல் தொடர்ந்து போராடி, பல்வேறு இசைப் போட்டிகளில் முதல் பரிசை வென்றிருக்கிறார். 2015-ம் ஆண்டுக்கான தமிழகக் கல்வி ஆராய்ச்சியாளர் நிறுவனம் வழங் கிய ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை’ப் பெற்றிருக் கிறார். ‘தி இந்து’வுக்காக நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து:

‘‘என்னோட சொந்த ஊர் திண்டுக் கல் பக்கத்திலிருக்கிற நிலக் கோட்டை. எனக்கு 6 அக்காக்கள், ஒரு அண்ணன். நான்தான் வீட் டோட கடைக்குட்டி. என்னோட மூன்றாவது வயதில் பார்வை பறிபோனது.

சின்ன வயசிலிருந்தே பாட்டுப் பாடுவேன். நான் யாரிடமும் முறை யாக இசைக் கற்றுக் கொண்ட தில்லை. வீட்டில் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத் தின் பாடல்களை நானாக பாடிக் கொண்டிருப்பேன். கர்நாடக இசையில் நித்யஸ்ரீ, பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன் பாடல்களை ரொம்பவும் ரசிப்பேன். மெல்லிசையில் சித்ரா, ஹரிணி ரொம்பப் பிடிக்கும். என் னோட இசை ஆர்வத்துக்கு அப்பா, அம்மாவும் என்னோட பள்ளிக்கூட ஆசிரியர்களும் மிகுந்த தூண்டு தலைத் தந்தார்கள்.

‘உன்னால் முடியும்’ என்கிற நம்பிக்கையோடுதான் நான் எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொள் வேன். மாவட்ட அளவிலான பல பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இருக்கின்றேன். நான் கலந்து கொண்ட அனைத்துப் பாட்டுப் போட்டிகளிலும் இதுவரை முதல் பரிசுகளை மட்டுமே பலமுறை வென்றிருக்கின்றேன்.

பாட்டுப் போட்டியில் மட்டுமல் லாது ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகள் வென்றிருக்கின் றேன். 2007-ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற தமிழக அளவிலான பாட்டுப் போட்டியில் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸின் கைகளால் நான் தங்க மோதிரம் பரிசு பெற்றது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.

‘நம்மால் இந்த உலகைப் பார்க்க முடியாமல் போகலாம். ஆனால், இந்த உலகம் நம்மைத் திரும்பிப் பார்க்கும்படியாய் இந்த சமுதாயத்துக்கு நமது பணியை தொடர்ந்து செய்ய வேண்டும்’ என்று எப்போதும் என் மனதில் நான் எண்ணிக் கொள்வேன்.

மதுரை தல்லாகுளம் ஸ்ரீசற்குரு சங்கீத வித்யாலயாவில் படித்தேன். கடந்த 5 ஆண்டுகளாக உத்தர மேரூர் அரசுப் பெண்கள் பள்ளியில் இசை ஆசிரியராக பணி செய்து வருகிறேன். 6 முதல் 10 ம் வகுப்பு வரை குழந்தைகள் திருக்குறள் மற்றும் மனப்பாட செய்யுள்களைப் படிக்க சிரமப்படுவதைக் கண்டேன். அவர்கள் எளிதாக படிப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித் தேன். அப்போதுதான் எனக்கு இந்த எண்ணம் வந்தது.

திருக்குறள், சிலப்பதிகாரம், பாரதியார் பாடல்களுக்கு எளிய முறையில் இசையுடன் பாடுவது போல் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தேன்.

சுமாராக படிக்கும் குழந்தைகள்கூட 3, 4 முறை பாடிய பிறகு, அவர்களாகவே மனப்பாடமாய் பாடலை ஒப்பிக்கும் அள வுக்கு தயாராகிவிடுகிறார்கள். 6, 7, 8-ம் வகுப்பு குழந்தைகள் 10 திருக்குறளை ராகத்தோடு மனப்பாடமாய் சொல்வதைக் கேட்கும்போது எனக்கு அளவிட முடியா பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகிறது.’’

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x